பணிபுரியும் பெண்களின் வசதிக்காக குறைந்த வாடகையில் செயல்படுத்தி வரும் தோழி மகளிர் விடுதி திட்டம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பெண்கள் பலர் பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து சென்னை திருச்சி கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் பணியாற்றி வருகின்றனர். வேலைக்காவும் பயிற்சிக்காகவும் வரும் பெண்கள் பல்வேறு தனியார் விடுதிகளில் வாடகை கொடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதில் குறைந்த சம்பளத்திற்க்கு பணியாற்றும் பெண்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அப்படியே அதிக வாடகை கொடுத்து தங்கினாலும் பல விடுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகத்தான் உள்ளது.
தோழி விடுதி திட்டத்தின் முக்கிய நோக்கம்:
இந்த திட்டத்தை தொடங்குவதற்கு முக்கிய நோக்கமே பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் தங்கும் வசதிகள் உள்ளது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பும் உள்ளது.
தோழி விடுதி திட்டத்தில் கிடைக்கும் வசதிகள் :
பெண்களின் பாதுகாப்பு மற்றும் தங்கும் வசதிகளின் தரத்திற்கு ஏற்ப தோழி விடுதி திட்டம் இதில் இடம் பெற்றுள்ளன. ஓய்வு அறை, சாப்பாட்டு அறை, லிப்ட் வசதி, வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ், அயர்ன் போர்டு, 24/7 வைஃபை, வாட்டர் கூலருடன் கூடிய ஆர் ஓ வாட்டர், ஹூட்டர், குளிர்சாதனப் பெட்டி , மைக்ரோ வேவ் டிவி போன்ற வசதிகள் இங்கு உள்ளன. நம் பாதுகாப்பை மேம்படுத்துவதில் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கூடிய சிசிடிவி கேமராக்களும் உள்ளன கார் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியும் உள்ளது.
தோழி விடுதியின் அம்சங்கள்:
மகளிர் விடுதியில் பாதுகாப்பு காரணமாக பயோமெட்ரிக் சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளத. விடுதியில் பாதுகாவலர் பராமரிப்பாளர் போன்றவர்களும் பணியில் இருப்பார்கள். இந்த விடுதியில் தனி அறைகளும் இரண்டு பேர் நான்கு பேர்மற்றும் ஆறு பேர் சேர்ந்து தங்கக்கூடிய அறைகளும் உள்ளன. வாடகை ரூ 4000 முதல் தொடங்குகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறையும் பணம் செலுத்தலாம்.ப்[பாதுகாப்பு காரணங்களால் இரவு 10 மணிக்குள் அனைவரும் விடுதிக்கு வந்துவிட வேண்டும்
தோழி விடுதி அமைந்துள்ள இடங்கள்
- சென்னை
- கோயம்புத்தூர்
- ஓசூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- தூத்துக்குடி
மேலும் அந்த மாவட்டங்களில் உள்ள தோழி விடுதியிலுள்ள இடத்தை அறிந்து கொள்ள https://www.tnwwhcl.in/ இந்த வலைதளத்தை click பண்ணவும்.
தோழி விடுதி கட்டணம் :
தமிழக அரசின் தோழி விடுதிகளின் கட்டணம் இடத்திற்கு இடம் வேறுபட்டாலும் குறைந்த கட்டணத்தில்தான் செயல்படுகின்றன. இந்த விடுதியில் வசிபவரிடம் எந்தவொரு மின்சார கட்டணமும் வசூலிக்க படுவதில்லை. மேலும் தோழி விடுதி பற்றி தகவல்களை அறிய 9499988009 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்
தோழி விடுதியில் தங்க Online லில் விண்ணப்பிப்பது எப்படி:
தோழி விடுதியில் தங்க விரும்பும் பெண்கள் தினசரி அல்லது மாதந்திர அடிப்படையில் தங்கள் அறைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதக்கு அதிகார பூர்வ வலைத்தளம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
