உங்க! உடல் எடையை குறைக்கணுமா? அப்போ! கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!

பொதுவாக உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று சில பேர் சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் அவங்க உடல் சோர்வு அடையுமே தவிர உடல் பருமன் குறையாது . அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். கலோரிகள் நிறைந்த அதிகமான உணவு பொருட்களை சாப்பிட கூடாது. அதிகமான காய்கறிகள், பழங்கள்,தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி சேர்ப்பதால் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.

  • தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து குடித்து வர உடல் எடை குறையும்.
  • கொலுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிட கூடாது.
  • தினமும் இரண்டு மணி நேரம் அதிகாலையில் எழுந்து நடக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும்.
  • மதிய இடைவேளையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும் .
  • மாவு சத்து அதிகமுள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.
  • வாரத்தில் ஒரு நாள் ஓட்ஸ் கஞ்சி குடித்து வந்தால் உடல் மெலிந்து காணப்படும்.
  • முந்தரி, பாதாம் பருப்பு ,நெய் நிறைந்த பொருட்களை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
  • அருகம்புல் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
  • தினமும் கொள்ளு ரசம் ,கொள்ளு சட்டினியும் செய்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். கொள்ளு வைத்து நிறைய உணவுகளை தயாரித்து சாப்பிடலாம். இது உடல் பருமனை குறைக்க இது ஒரு நல்ல மருந்து.
  • தொப்பை குறைய பப்பாளி காயை தினமும் உணவில் சேர்த்தால் தொப்பை குறையும்.
  • அருகம்புல் சாறு, வாழைத்தண்டு சாறு அதிகம் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *