தினமும் தண்ணீர் குடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இது தெரியாம போச்சே!

நாம் உயிர் வாழுவதற்கு மிக முக்கியமானது தண்ணீர். தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வாழமுடியாது. மனித உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கும், திசுக்களுக்கும், சரியாக செயல்படுவதற்கு தண்ணீர் அவசியமாகிறது. உடலில் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. நம் உடலில் உள்ள கழிவுபொருகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது. இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் பல நோய்களை குணப்படுத்தும் மருந்து ஆகும். விவசாயிகளுக்கு தண்ணீர் மிக முக்கியம். தண்ணீரின் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

  • வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிக நல்லது. இது நம் குடலை சுத்தப்படுத்தும். உடலில் தங்கி உள்ள நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
  • வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து இரத்தத்தில் ஆக்ஸிஜன்அதிகம் இருப்பதால் நம் உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.
  • நாம் வேலைக்கு செல்லும்போது சரிவர சாப்பிடாமல் அல்சர் ஏற்படும். இதை தடுப்பதற்கு நாம் தினந்தோறும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • உங்க முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால் உங்கள் சருமம் அழகு இல்லாமல் போய்விடும். எப்போதும் நாம் அழகாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தண்ணீர் நல்லா குடிக்க வேண்டும்.
  • தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் உங்கள் எடை குறையும். நம் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்கள்.கொழுப்புக்கள் கரைந்து எடை குறைவதற்கு உதவியாக இருக்கிறது.
  • தண்ணீர்யுடன் சிறிது சீரகத்தை போட்டு கொதிக்க வைக்கவேண்டும் இந்தசீரக தண்ணீரை தினமும் குடித்தால் பசியை தூண்டும்.
  • போதுமான தண்ணீர் குடித்து வந்தால் தலைவலி மற்றும் முதுகு வலி வருவது குறையும்.
  • புத்துணர்ச்சியுடனும் ,சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது .

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *