தமிழ்நாடு அரசின் ” நீயே உனக்கு அரசன் திட்டம்”

தமிழகத்தில் பாரம்பரிய கலைகளை காக்கவும், அழிந்து வரும் மரபு சார் கைவினைப் பொருட்களை கொண்டு வரவும் கலையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை கலை தொழில் முனைவோராக உருவாக்கவும் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் நீயே உனக்கு ராஜா திட்டமாகும் இந்த திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒரு கலை பொருட்களில் சிறந்து விளங்குகின்றன. ஒவ்வொரு கலையும் கலைபடைப்புகளை உருவாக்குகின்றன அந்த கலைபடைப்புகளை உருவாக்கும் பயிற்சியை தான் தமிழ்நாடு அரசு நீயே உனக்கு ராஜா திட்டம் ஆகும்.

நீயே உனக்கு ராஜா திட்டம் என்றால் என்ன?

நீயே உனக்கு ராஜா திட்டம் என்பது தமிழ்நாட்டில் மரபு சார் தொழில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் வேலையின் தரத்தை உருவாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தின்படி 01 டிசம்பர் 2023 அன்று கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு இளைஞர்கள் நலன் மட்டும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். தமிழ்நாடு கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் இலவச பயிற்சியும் கூட உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

நீயே உனக்கு ராஜா திட்டத்தின் முக்கிய நோக்கம்:

பல்வேறு பாரம்பரிய கலைகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கி தமிழ்நாட்டில் பாரம்பரிய கலைகளை காப்பது மரபுசார் கைவினைகளுக்கு புத்துயிர் அளிப்பதும் மற்றும் கலையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் முன்னேற்றுவதை நீயே உனக்கு ராஜா திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

நீயே உனக்கு ராஜா திட்டத்தின் அம்சங்கள்:

அழிந்து வரும் நிலையில் உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய களை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பில் ஈடுப்பட்டு வரும் கைவினை கலைஞர்கள் இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தின்போது இளைஞர்களுக்கு மாதம் மாதம் உதவித்தொகை 12,500 ரூபாயும் பயிற்சிக்கான கருவிகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கபடுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் கிராமத்தில் இருக்கும் இலைஞர்கள் வேலை வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் கடன் உதவி வழங்க அரசாங்கம் வங்கி கடனும் பல்வேறு மானியமும் வழங்கப்படுகிறது.

பாரம்பரிய தொழில் தொடங்க இலவச பயிற்சி :

நீயே உனக்கு ராஜா திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சியில் மாற வேலைப்பாடு பயிற்சியும், ராமநாதபுரத்தில் பனை ஓலை கலைப்பொருட்கள் உருவாக்கும் பயிற்சியும், தூத்துக்குடியில் கடல் சிப்பிகளை வைத்து கலைப்படைப்புகளை உருவாக்கும் பயிற்சியும், திருநெல்வேலியில் பத்தமடைப்பாய் பின்னும் பயிற்சியும், மதுரையில் களிமண் மற்றும் காகிதத்தில் மண்பாண்டங்கள் செய்வது மற்றும் கைகட்டுச் சாயம் உருவாக்கும் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

நீயே உனக்கு ராஜா திட்டத்திற்க்கு விண்ணப்பிப்பது எப்படி

இந்த திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *