அதிகமான பல் வலியா? உடனடி தீர்வு

இந்த காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பல் வலியால் அனனவரும் பாதிக்கப்படுகிறார்கள். பல் வலி வந்ததும் நம்மால் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவர்கள் பல்லை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் சிறு வயதில் பல்லை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகிறது. பல் சொத்தை சரியாக கவனிக்காமல் இருந்தால் பக்கத்தில் உள்ள பல்லை பாதிக்கும். காலபோக்கில் அது ஆழமாகி பற்களில் உள்ள வேர்களை தாக்கி அது மிகவும் பாதிப்பு அடைய செய்யும். இந்த வலியை குறைக்க என்ன செய்யலாம் என்பதை கீழே பார்ப்போம்.

  • பல் வலி தாங்கமுடியவில்லையா சிறிது கல் உப்புடன் அரை எலுமிச்சை பழசாறு எடுத்து நன்கு கலக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை எடுத்து இந்த சாரை தொட்டு பல் வலிக்கும் இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும். பத்தே நிமிடத்தில் வலி பறந்து போய்விடும்.
  • சிறிது உப்பு, துளசி இலை, மிளகு சேர்த்து வலி உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.
  • பல் வலி உடனே சரியாக வெதுவெதுப்பான தண்ணீருடன் சிறிதளவு உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்
  • கிராம்பு மற்றும் கிராம்பு எண்ணெய் வலி இருக்கும் இடத்தில் வைத்தால் சிறிது நேரத்தில் வலி குறைந்து விடும்.
  • சூடான காபி, டீ குடிப்பதை தவிர்க்கவேண்டும். குடித்தால் அதிகரிக்க செய்யும். இனிப்பான மற்றும் குளிர்ந்த பானங்களை பருக வேண்டும்.
  • வெங்காய சாருடன் நல்லெண்ணெய் சேர்த்து சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைத்தால் சொத்தை பல்லில் உள்ள பூச்சிகள் மற்றும் கிருமிகள் இறந்துவிடும். சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *