அடிக்கடி வயிறு வலி வருமா?அப்போ உடனே இத செய்ங்க!

இரவு நேரத்தில் வயிற்று வலி காரணமாக நம் மிகவும் அவதிப்படுவோம் .அப்போ மருத்துவமனைக்குபோக முடியாது. வயிற்றுவலி,வயிறு குத்தல்,அடி வயிற்றுவலி இதனை குறைப்பதற்கு நாம் வீட்டுவைத்தியத்தை கையாளலாம்.இதன் மூலம் வயிறு வலி குறைய வாய்ப்பு உள்ளது. அதை பற்றி கீழே பார்ப்போம்.

  • ஒரு கிண்ணத்தில் 100லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.பிறகு அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் ஒரு சிட்டிகை சோட உப்பு சேர்த்து நன்கு கலந்து குடிக்க ஒரு நிமிடத்தில் வலி பறந்து போய்விடும்.
  • சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு இரவில் சிறிது வெந்தையத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வெறும் வயற்றில் குடிக்க வேண்டும். அந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிட வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் உடலில் உள்ள சூடு குறையும்.
  • ஒரு கிண்ணத்தில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் சக்கரை சேர்த்து கலந்து குடித்தால் 5 நிமிடத்தில் வலி குறைந்து விடும்.
  • நம் வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம் வயிறு வலி சரி செய்யலாம். பழையசோறு தண்ணீருடன் சிறிதளவு உப்பு,பெருங்காய தூள் சேர்த்து நன்கு கலந்து குடிக்கவேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடம்பில் உள்ள சூடு குறையும். இதனால் ஏற்படக் கூடிய வயிறு வலி சரியாகும்.
  • தினமும் ஒரு மாதுளைபழம் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *