விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம்

ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆண்டுக்கு அதிக பட்சம் ரூ.30 லட்சம் வரை உதவிதொகை வழங்கும் தமிழ்நாடு அரசின் தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் குறித்து கிழே காண்போம்.

சிறப்பு உதவித்தொகை திட்டம்:

தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் உலகளவில் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் செயல்படுத்தப்படும் திட்டமே தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையான வீரர்களை ஊக்கபடுத்தும் வீதமாக ஆண்டுக்கு அதிக பட்சம் ரூ.30 லட்சம் வரை உதவிதொகை வழங்கப்படுகிறது

திட்டத்தின் நோக்கம்:

தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆர்வம் திறமை ஆற்றல் ஆர்வங்களை உலகளவிற்கு வெளிபடுத்துதல் வேண்டும். சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையில் தயார்படுத்த வேண்டும். மாநிலத்துக்கு விளையாட்டு துறையில் பெருமை சேர்க்க வேண்டும்

திட்டத்தின் நன்மைகள்:

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு சீருடை விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதி உதவி அளிக்கப்படுகிறது.வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க விமான கட்டணம் தங்குமிடம் உணவு போன்ற நிதி உதவி வழங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரங்குகள் மற்றும் மைதானங்களை இலவசமாக பயன்படுத்த வழிவகுக்கிறது. ஆண்டுக்கு அதிக பட்சம் ரூ. 30 லட்சம் வரை உதவிதொகை வழங்குகிறது.

தகுதி பெரும் செலவினங்கள்:

  • சிறப்பு சீருடை விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது
  • வெளிநாட்டுகளில் பயிற்சி பெறுவதற்கு நிதி உதவி வழங்குகிறது.
  • சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு போக்குவரத்து தங்குமிடம் உணவு செலவுகள் போன்றவற்றிருக்கு நிதி உதவி அளிக்கிறது

உதவி தொகை பெறுவதற்கான தகுதிகள் :

  • தமிழ்நாட்டு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும்
  • தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • கடந்த 2 ஆண்டுகளில் உலக தரவரிசை பட்டியலில் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்
  • ஒலிம்பிக் /உலக சாம்பியன்ஷிப்/ ஆசியா விளையாட்டு/ காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்
  • கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்

நிபந்தனைகள்:

தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் மாதந்தோறும் தங்கள் பயிற்சி விவரங்களை காயம் மற்றும் சிகிச்சை தகவல்களை SDAT இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இந்த விதிமுறைகளை மீறினால் உதவித்தொகை ரத்து செய்யப்படும்.

தேவையான ஆவணங்கள்:

இந்த திட்டத்தின் கீழ் உதவி தொகை பெரும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்

  • பிறப்பு சான்றிதழ்
  • போட்டி வெற்றிச் சான்றிதழ்கள்
  • ஆதார் அட்டை
  • இருப்பிட சான்றிதழ்
  • வருமானச்சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

இந்த உதவி திட்டத்திற்கு Online மூலமாக விண்ணபிக்க வேண்டும் விண்ணப்பிப்பதர்க்கான link கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதர்க்கான link 👉 APPLY LINK

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *