சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சுயதொழிலை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயதிரங்கள் வழங்கும் திட்டம்கொண்டு வரப்பட்டன.
சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மட்டும் ஏழை எளிய மக்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டன. மேலும் நலிவுற்ற பெண்களுக்கு சுய தொழிலை அதிகரிக்கும் நோக்கில் இலவச தையல் இயந்திரம் திட்டம் கொண்டுவரப்பட்டது.
சத்தியவாணி முத்து அம்மையார் இலவச திட்டத்தினை கணிணி மயமாக்கும் பொருட்டு மூலம் வரை பயன்பாடு தயார் செய்யப்பட்டு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு அரசு இ – சேவை மையங்களில் இணைப்பு வழங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்க்கான விண்ணப்பங்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக அரசு இ சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
விதவைகள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் நலிவுற்ற பெண்கள் இ – சேவை மையத்தில் வருமானச் சான்றிதழ் ஒரு ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டும் தையல் பயிற்சி சான்றிதழ் நகல் 6 மாதத்திற்கு மேல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் பள்ளிசான்றிதழ் வயது சான்றிதழ் இருக்க வேண்டும் குறைந்த பட்சம் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் சாதிசான்றிதழ் நகல் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் அல்லது ஊனமுற்றோர் அவர்களுக்குரிய சான்றிதழ் இருந்தால் இந்த விண்ணப்பங்ககளை சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய சான்று :
- வருமானச்சான்று 72,000 க்குள் இருக்க வேண்டும்
- இருப்பிடச்சான்று
- தையல் பயிற்சி சான்று குறைந்த பட்சம் 6 மாதம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
- வயது சான்று
- சாதி சான்று
- விண்ணப்பதாரர் புகைப்படம்
- விதவை கணவனால் கைவிடப்பட்டோர் ஆதரவற்றோர் என்பதற்க்கான சான்று
- ஆதார் அடையாள அட்டை
