பிரதம மந்திரி இ – டிரைவ் எலட்ரிக் மானியத் திட்டம்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதர்க்காக எலக்ட்ரிக் வாகன வாடிகையாளர்களுக்கு இ-வவுச்சர் மூலமாக ஊக்கதொகைகளை வழங்கும் பிரதம மந்திரி இ – டிரைவ் திட்டம் குறித்து கீழே காண்போம்.

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இந்திய அரசாங்கம் FAME-1 FAME-II மற்றும் EMPS போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டங்கள் செப்டம்பர் 2024 முடிவுக்கு வந்தது

பிரதம மந்திரி இ டிரைவ் திட்டம்:

எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும். செப்டம்பர் 09,2024 பிரதம மந்திரி இ – டிரைவ் மானியத்திட்டதை கொண்டு வந்துள்ளது

2 ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும் புதிய எலக்ட்ரிக் வாகன மானியத்திட்டதின் கீழ் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் மூன்று இரு சக்கர வாகனங்கள், எலட்ரிக் பேருந்துகள் எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ் மற்றும் எலட்ரிக் ட்ரக்குகள் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது.

பிஎம் இ டிரைவ் திட்டத்தின் நோக்கம்:

எலட்ரிக் வாகனங்களை வாங்குவதற்க்கான ஊக்கதொகைகளை வழங்குவதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதன் மூலம் நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவுவது மற்றும் இந்தியாவில் ஒரு வலுவான எலக்ட்ரிக் வாகன உற்பத்தி சூழலை உருவாக்குவது பிஎம் இ டிரைவ் திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

பிஎம் இ டிரைவ் திட்டத்தின் நன்மைகள் :

இரு சக்கர வாகனங்கள் உயர் ரக எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் பேருந்துகள் எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ் மற்றும் எலக்ட்ரிக் ட்ரக்குகள் போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படுகிறது. வாகன வகை மற்றும் பேட்டரி திறனை பொறுத்து மாறுபட்டாலும் வாகனம் வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட செலவுக்கு உதவியாக இருக்கும்.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் எல்க்ட்ரிக் வாகனத்தின் மானியத்தை டீலரிடமே இ வகுச்சர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். எந்தவொரு காகித செயல்முறையும் செய்ய தேவையில்லை.இதி காற்று மாசு பாட்டிற்கு லாரிகள் முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்த திட்டத்தில் எலக்ட்ரிக் ட்ராக்குகளைஊக்குவிப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மாநில போக்குவரத்து நிறுவனங்கள் அல்லது பொது போக்குவரத்து நிறுவனங்கள்14,028 எலட்ரிக் பேருந்துகள் வாங்க ரூ 4,391 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. EV சார்சிங் ஸ்டேசன் வசதிகள் அதிகரிக்கும்

பிஎம் இ டிரைவ் மானியத்திற்கு தகுதியான வாகனங்கள் :

இ-2 வீலர்கள் (ஸ்கூட்டர்கள், பைக்குகள்)

இ -3 வீலர்கள் (e-Richshaw, e-Cart, L5 வாகனங்கள்

எலக்ட்ரிக் பேருந்துகள்

எலக்ட்ரிக் ட்ராக்குகள்

எலக்ட்ரிக் ஆம்புலன்ஸ்

EV சார்சிங் ஸ்டேசன்

பிஎம் இ டிரைவ் திட்டத்தின் விவரங்கள் :

இ-2 வீலர்கள் ரூ 10,000 (ரூ 5000kwh) அதிக பட்ச விலை ரூ 1.5 லட்சம்

இ- Richshaw & இ-Cart ரூ 25,000 (ரூ 5000kwh) அதிக பட்ச விலை ரூ 2.5 லட்சம்

இ-3 சக்கர வாகனங்கள் ரூ 50,000 (ரூ 5000kwh) அதிக பட்ச விலை ரூ 5 லட்சம்

இ- பேருந்துகள் ரூ 2 லட்சம் (ரூ 10,000/kwh) அதிக பட்ச விலை ரூ 3.5 லட்சம்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி பெற்ற EV டீலரை தொடர்பு கொள்ள வேண்டும். டீலர் – PM E-DRIVE போர்ட்டலில் இ Voucher உருவாக்குவர் ஆதார் அட்டை பயன்படுத்த வேண்டும். வாடிக்கையாளர் மொபைலுக்கு இ Voucher டவுன்லோடு செய்து வாடிக்கையாளர் கையொப்பமிட்டு அதை சமர்பிக்க வேண்டும். கையொப்பமிடப்பட்ட இ Voucher SMS மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அதை வைத்து எலட்ரிக் வாகனத்தை வாங்கிக்கொள்ளலாம்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *