இந்தியாவில் மிகவும் போட்டிதன்மை வாய்ந்த தேர்வுகளில் ஒன்றாக யுபிஎஸ்சி தேர்வு விளங்குகிறது. இத்தேர்வில் வெற்றி பெற நல்ல பயிற்சியும் வழிகாட்டுதலும் முகவும் முக்கியமானது . அதை விட பொருளாதார தேவையும் ரொம்ப அவசியம் வாய்ந்தது இதற்க்கு திறமையும் ஆர்வமும் இருந்தால் பொருளாதார வசதியின்மை காரணமாக பல ஏழை , எளிய மாணவர்கள் IAS,IPS,IFS கனவுகள் நனவாகாமல் போய்விடுகிறது
தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பிரச்சனையை போக்கி தேர்வில் வெற்றி பெற செய்து அவர்களின் கனவை நனவாக்க கொண்டுவந்த திட்டமே நான் முதல்வன் யுபிஎஸ்சி உதவி தொகை திட்டம் இத்திட்டத்தின் நன்மைகள் , தகுதி வரம்புகள் , விண்ணப்பிக்கு முறை போன்றவற்றை காண்போம்.
நான் முதல்வன் UPSC உதவித்தொகை திட்டம்:
ஒவ்வொரு மாணவனுக்கும் IAS,IPS,IFS ஆக வேண்டும் என்ற கனவு இருக்கும்.ஆனால் ஏழை எளிய மாணவர்கள் தங்கள் பொருளாதார ரீதியாக அவர்கள் பயிற்சியை சரியாக தொடர முடியவில்லை. இந்த பிரச்சனையை சரி செய்து மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் மாணவர்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நோக்கத்தில் தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலமாக பொருளாதாரரீதியாக பின்தங்கி உள்ள மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தயாராகுவதற்க்கும் அரசு சார்பில் நிதி உதவியும் இலவச யுபிஎஸ்சி தேர்வு பயிற்சியும் வழங்கப்படுகிறது
நான் முதல்வன் UPSC உதவித்தொகை திட்டத்தின் நன்மைகள் :
UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தமிழக மாணவ மாணவியர்கள் நான் மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் மதிப்பீட்டு தேர்வு வைத்து அதில் தேர்வாகும் 1,000 பேர் UPSC பயிற்சி நிறுவனத்தில் நியமிக்கப்படுகிறார். போட்டி தேர்வுக்கான பயிற்சி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் . பயிற்சிக்கு தேவையான அனைத்து படிப்பு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
இலவச பயிற்சியோடு மாணவ அன்றாட பயனச் செலவுகள் , உணவு தங்குமிடம் மட்டும் அத்தியவாசியமான பொருட்கள் வாங்க நிதிவுதவியும் வழங்கப்படுகிறது. UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒவ்வொரு மாணவர்களும் மாதந்தோறும் ரூ. 7500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்து மெயின்ஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 25,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை அனைத்தும் DBT மூலம் மாணவர்களின் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது
UPSC உதவித்தொகைக்கான தகுதிகள் :
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வயது 21 லிருந்து 22 வயது எட்டாமல் இருக்க வேண்டும். அதுபோல் SC/ST/ பிரிவினர் 37வயதும் BC/MBC/DNC பிரிவினருக்கு 35 வயது இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு 42 வயதும் பொது பிரிவினருக்கு 32 வயதும் இருக்க வேண்டும்.
UPSC உதவித்தொகைக்கு தேவையான விண்ணப்பங்கள்:
- ஆதார் அட்டை
- பிறப்பு சான்றிதழ்
- பட்டப்படிப்பு சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- 10 மற்றும் 12 ஆம் மதிப்பெண் சான்றிதழ்
- மாற்றுத்திறனாளி சான்றிதழ்
தேர்வு முறை:
OMR அடிப்படையில் தேர்வு முறை நடைபெறும், பொது அறிவு Question, CSAT Question, Question Paper ஆங்கிலத்தில் இருக்கும்.
UPSC உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். புதிதாக பதிவு செய்பவர்கள் Email ID Phone Number பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். நான் முதல்வன் UPSC முதல் நிலை உதவி தொகைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சமர்பிக்க வேண்டும்.
