தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.இதனை தொடர்ந்து திருமண உதவி தொகையும் இந்த திட்டத்துல இருக்கு.அதாவது நலவாரியத்தின் கீழ் தமிழக அரசு திருமண உதவி தொகையாக ரூ 20,000 வரை பெறலாம்.இதில் தொழிலாளர்கள் பயனடையுமாறு நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய திருமணத்திற்கோ அல்லது அவர்களின் முதல் இரண்டு குழந்தைகளின் திருமணத்திற்கோ ரூ.20000 வரை உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.
யார் விண்ணபிக்கலாம்?
- நலவாரிய அட்டை பெற்றவர்கள் அல்லது நலவாரிய அட்டை வைத்திருக்கும் தொழிலாளியின் முதல் இரண்டு குழந்தைகள்.
வயது தகுதி
- ஆண்-21 வயது நிரம்பிருக்க வேண்டும்.
- பெண்-18 வயது நிரம்பிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு : திருமணம் செய்யப்பட்ட பிறகு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
நலவாரிய மையம் வாரியத்தின் கீழ் அரசு வழங்கும் திருமண உதவித்தொகை நலத்திட்ட உதவிகள்:
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ 20,000
- இதர வாரியம்-ரூ 5000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ 5000
தேவையான ஆவணங்கள்
- தொழிலாளியின் நலவாரிய அட்டை
- மணமக்களின் திருமணப் பதிவு சான்று
- இல்லையெனில்: திருமண மண்டப ரசீது / கோவில் ரசீது / திருமண அழைப்பிதழ் (அச்சக விவரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
- மணமக்களின் புகைப்படம்
- வயது சான்று: வாக்காளர் அட்டை / பள்ளி சான்று / ஓட்டுனர் உரிமம் / குடும்ப அட்டை / பிறப்புச் சான்றிதழ்
- நலத்திட்ட உறுதிமொழிச் சான்று
- தொழிற்சங்க தலைவர் அல்லது செயலரின் கையெழுத்து மற்றும் முத்திரை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
எவ்வாறு விண்ணபிப்பது?
பதிவு பெற்ற உறுப்பினரின் பெயர் – நலவாரிய அட்டை உறுப்பினரின் பெயரை எழுத வேண்டும்.
தந்தை அல்லது கணவர் பெயர் – அட்டை வைத்திருப்போர் ஆணாக இருந்தால் அவர்களுடைய தந்தை பெயரை குறிப்பிட வேண்டும்.இதுவே பெண்ணாக இருந்தால் அவர்களுடைய கணவர் பெயரை குறிப்பிட வேண்டும்.
முழு முகவரி – உறுப்பினர் அட்டையில் இருக்கும் முகவரியை எழுத வேண்டும்.
பதிவு எண்/நாள் – உறுப்பினர் அட்டையில் உள்ள பதிவு எண் மற்றும் பதிவு செய்ய பட்ட நாளை குறிப்பிட வேண்டும்.
குடும்ப அட்டை எண் – நடப்பில் உள்ள Smart card இல் உள்ள 333 எனத் தொடங்கும் நம்பர் ஐ எழுத வேண்டும்.
ஆதார் எண் – நலவாரிய அட்டையின் உறுப்பினருடைய ஆதார் எண்ணை எழுத வேண்டும்.
தொழிலின் தன்மை – மேலே வாரியத்தின் பெயரில் குறிப்பிட்டுள்ள தொழிலுக்கு சார்ந்த தொழிலை எழுதவேண்டும்.உதாரணத்துக்கு (கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சு தொழில்…. என குறிப்பிட வேண்டும்.)
திருமண உதவி தொகை யாருக்காக கேட்கபடுகிறது தனக்கு/மகன்/மகள் – நலவாரிய அட்டை வைத்திருப்போருக்காக விண்ணப்பித்தால் மகள் மற்றும் மகன் ஐ அடித்து விட்டு உறுப்பினருடைய பெயரை எழுதவும்.மகளுக்காக விண்ணப்பித்தால் தனக்கு மற்றும் மகன் ஐ அடித்து விட்டு பெண் பிள்ளையின் பெயரை எழுதவும்.மகனுக்காக விண்ணப்பித்தால் தனக்கு மற்றும் மகள் ஐ அடித்து விட்டு ஆண் பிள்ளையின் பெயரை எழுத வேண்டும்.
திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நாள் – திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் தேதியை எழுதவும்.
பதிவு பெற்ற உறுப்பினரின் கையொப்பம் -.நலவாரிய அட்டையில் கையெழுத்து போடப்பட்டிருந்தால் உறுப்பினர் கையெழுத்து போட வேண்டும் இல்லை அட்டையில் கை ரேகை வைக்க பட்டிருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.
தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் முத்திரை(Seal) – அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று கண்டிப்பாக பெற்று கொள்ளவும்.
விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை:
- அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
- தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
- நீல நிற பேனாவை வைத்து மட்டுமே எழுத வேண்டும்.
தொடர்புக்கு :
மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
