தமிழ்நாடு நலவாரியத்தின் மூலம் ITI/டிப்ளமோ பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகையாக ரூ 3000 பெறலாம்.அந்த கல்வி உதவி தொகை விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது என இப்பதிவில் காணலாம் .
யார் விண்ணபிக்கலாம்?
- நலவாரிய அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்கள்
- அந்த தொழிலாளர்களின் ITI /டிப்ளமோ படிக்கும் மகன் அல்லது மகள்கள்.
தேவையான ஆவணங்கள்:
- உறுப்பினரின் ஆதார் கார்டு
- பேங்க் புக்
- நலவாரிய அட்டை
- பயிலும் மாணவரின் ஆதார் கார்டு
- பயிலும் மாணவரின் நடப்பு கல்வி சான்றிதழ்
நலவாரிய மையம் வாரியத்தின் கீழ் ITI/டிப்ளமோ பயிலும் மாணவ மாணவியருக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள்:
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ3000
- இதர வாரியம்-ரூ 1000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ3000
விடுதியில் தங்கி படித்தால்:
- கட்டுமான தொழில் வாரியம்-ரூ4000
- இதர வாரியம்-ரூ 1000
- கார்,ஆட்டோ டிரைவர் வாரியம்-ரூ4000
எவ்வாறு விண்ணப்பிப்பது?
ITI/டிப்ளமோ பயில கல்வி உதவி தொகையினை விண்ணப்பிபதற்கான விண்ணப்ப படிவம் கீழே உள்ள Diplomo Cliam Form என்ற லிங்க் இல் உள்ளது.
விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின் பெயர் – கல்வி பயில என எழுதவும்.
உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர் – உறுப்பினர் அட்டையில் எந்த வாரியத்தின் பெயர் இருக்கோ,அந்த வாரியத்தின் பெயரை எழுத வேண்டும்.
உறுப்பினரின் பெயர் – நலவாரிய அட்டை உறுப்பினரின் பெயரை எழுத வேண்டும்.
தந்தை அல்லது கணவர் பெயர் – அட்டை வைத்திருப்போர் ஆணாக இருந்தால் அவர்களுடைய தந்தை பெயரை குறிப்பிட வேண்டும்.இதுவே பெண்ணாக இருந்தால் அவர்களுடைய கணவர் பெயரை குறிப்பிட வேண்டும்.
முழு முகவரி – உறுப்பினர் அட்டையில் இருக்கும் முகவரியை எழுத வேண்டும்.
பதிவு எண்/நாள் – உறுப்பினர் அட்டையில் உள்ள பதிவு எண் மற்றும் பதிவு செய்ய பட்ட நாளை குறிப்பிட வேண்டும்.
குடும்ப அட்டை எண் – நடப்பில் உள்ள Smart card இல் உள்ள 333 எனத் தொடங்கும் நம்பர் ஐ எழுத வேண்டும்.
ஆதார் எண் – நலவாரிய அட்டையின் உறுப்பினருடைய ஆதார் எண்ணை எழுத வேண்டும்.
தொழிலின் தன்மை – மேலே வாரியத்தின் பெயரில் குறிப்பிட்டுள்ள தொழிலுக்கு சார்ந்த தொழிலை எழுதவேண்டும்.உதாரணத்துக்கு (கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சு தொழில்…. என குறிப்பிட வேண்டும்.)
கல்வி உதவி தொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் – மகளுக்காக விண்ணப்பித்தால் மகன் ஐ அடித்து விட்டு பெண் பிள்ளையின் பெயரை எழுதவும்.மகனுக்காக விண்ணப்பித்தால் மகள் ஐ அடித்து விட்டு ஆண் பிள்ளையின் பெயரை எழுத வேண்டும்.
தேர்ச்சி பெற்ற /பயிலும் வகுப்பு /பயிலும் வருடம் – பயிலும் வகுப்பை டிக் செய்துவிட்டு விண்ணப்பத்தில் ITI/டிப்ளமோ பிரிவை மற்றும் வருடம் குறிப்பிட வேண்டும்.அடுத்து பயிலும் வருடத்திற்கு கீழ் நடப்பு கல்வி ஆண்டை குறிப்பிட வேண்டும்.
பதிவு பெற்ற உறுப்பினரின் கையொப்பம் -.நலவாரிய அட்டையில் கையெழுத்து போடப்பட்டிருந்தால் உறுப்பினர் கையெழுத்து போட வேண்டும் இல்லை அட்டையில் கை ரேகை வைக்க பட்டிருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.
இடம் மற்றும் நாள் – விண்ணப்பம் பதிவு செய்யப்படும் இடம் மற்றும் அன்றைய தேதியை குறிப்பிட வேண்டும்.
தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் முத்திரை(Seal) – அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று கண்டிப்பாக பெற்று கொள்ளவும்.
விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை:
- அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
- தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
- நீல நிற பேனாவை வைத்து மட்டுமே எழுத வேண்டும்.
தொடர்புக்கு :
மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
