நம் வீட்டிலில் வளர்க்க கூடிய மரத்தில் ஓன்று செம்பருத்தி மரம்.செம்பருத்தி பூவில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. நம் முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திக்கும் இந்த பூ உதவுக்கிறது. இந்த பூ மட்டும் அல்லாமல் இலை,வேறு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை பற்றி விரிவாக பாருக்கலாம். தலை முடி கருப்பாக மாறுவதற்கும் இது பயன்படுகிறது. செம்பருத்தி பூ மூலம் தயாரிக்கும் எண்ணையை ஆண்களும்,பெண்களும் பயன்படுத்துலாம். இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும்,கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கக்கூடியது. காய்ந்த இலை ,செம்பருத்தி பூ கூட நம் முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது .விநாயகருக்கு பிடித்த பூ என்றாள் நம் செம்பருத்தி பூ தான். இதனுடைய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள் :
- செம்பருத்தி இலையின் சாறு நம் தலைமுடி கருமையாக்கா உதவுகிறது. நம் உடம்புக்கு இது குளிர்ச்சி தரக்கூடியது. சொட்டை தலையிலும் முடி வளர செய்யக்கூடிய தன்மை கொண்டது.
- செம்பருத்தி பூவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வல்லமை கொண்டது . இதனால் நம்முடைய சருமம் மிருதுவாகவும் ,பளப்பளபாகவும் இது உதவுகிறது.
- இரத்த அழுத்தைதை குறைப்பதற்கு செம்பருத்தி பூ டி குடிக்கலாம். கர்ப்ப காலத்தில் இதை குடிப்பதை தவிர்க்கவும்.
- தினமும் செம்பருத்தி பூ பத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புண்கள் மற்றும் வாயில் புண்கள் குணமடையும்.
- நம் தலையில் பேன்,பொடுகு தொல்லை அதிகம் இருந்தால் இவற்றில் இருந்து விடுபட செம்பருத்தி பூவை பயன்படுத்துவது சிறந்தது.
- தலை முடி அதிகமாக வளர்வதற்கு தலைமுடி ,உதிறுவதை நிறுத்துவதற்கும்,கருமையாக வளர்வதற்கும் இந்த செம்பருத்தி பூ பயன்படுகிறது.
- செம்பருத்தி பூ, கருவேப்பிலையை நிழலில் காயவைத்து பிறகு அதை பொடி செய்து தேங்காய் எண்ணையுடன் கொதிக்க வைத்து பிறகு அதை தலையில் தேய்த்து வர தலைமுடி உதறுவது நின்று தலைமுடி வளர ஆரமிக்கும் .
- செம்பருத்தி பூவை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிரிக்கும். இதனால் ஏற்படக்கூடிய இரத்தசோகையில் இருந்து தப்பிக்கலாம்.
- ஒரு டம்ளர் தண்ணீர்யுடன் ஐந்துசெம்பருத்தி பூவை போட்டு நன்றாக கொதிக்கவைத்து,அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். இப்படி வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவை குடிக்கலாம்
