ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரைDrumstick leavesஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை

எல்லோரும் வீட்டில் வளரக் கூடிய மரம் முருங்கைமரம். முருங்கைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. முருங்கைக்கீரையில் கால்சியம், இரும்பு சத்து,வைட்டமின்,பொட்டாசியம்,புரதம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. முருங்கை மரத்தில் உள்ள முருங்கை பூ, முருங்கை கீரை,முருங்கைக்காய் அனனத்தும் மருத்துவ குணம் கொண்டது. முருங்கைக்கீரை செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்தசோகையில் இருந்து நம்மை பாதுக்காக்கிறது. நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க செய்ய பைட்டோநியூட்ரியன்ட்கள் முருங்கைக்கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையை சாப்பிடுவதனால் உடம்பில் எந்தவிதமான நோய்களும் வராது. வாரத்தில் இரண்டு,மூன்று நாட்கள் நம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

முருங்கைக்கீரையை வைத்து முருங்கைக்கீரை பொறியல்,முருங்கைக்கீரை சூப்,முருங்கைக்கீரை கூட்டு இப்படி செய்து சாப்பிடலாம். இரத்தசோகையால் பாதிக்கபட்டவர்கள் இந்த முருங்கைக் கீரையுடன் சிறிது சின்ன வெங்காயம், நெய், முட்டை சேர்த்து பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் இரத்தம் அதிகரிக்கும். இதை தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டுவந்தால் இரத்தசோகையால் குணமாகும். முருங்கைக்கீரையை சூப்செய்து குடித்துவந்தால் இருமல்,சளி நீங்கும். உடல் எடையை குறைக்கவேண்டும் என நினைத்தால் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். இப்படிசெய்து வந்தால் உடல் எடை குறையும்.

முருங்கைக்காயை வைத்து நாம் சாம்பார்,முருங்கைக்காய் பொறியல்,முருங்கைக்காய் கூட்டு செய்து சாப்பிடலம். முருங்கை பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்று புண் ஆறும் . நம் உணவில் அடிக்கடி முருங்கை பூவை சேர்த்து வந்தால் சக்கரை நோய் குணமாகும். கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முருங்கை பூவை சாப்பிட்டு வந்தால் கண்களில் உள்ள கோளாறுகளை சரி செய்கிறது . இதை சாப்பிட்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *