ஒரு சிலருக்கு தலைவலி லேசாகவும், அதிகமாகவும் வர கூடும்.கடுமையான தலைவலி வந்தால் யாருடையும் பேச பிடிக்காது. அதிக சத்தம் கேட்டால் தலைவலி மேற்கொண்டு அதிகரிக்கும்.அத்துடன் வாந்தியும் வர ஆரம்பிக்கும். வருடத்திற்கு இரண்டு,மூன்று முறை வந்த தலைவலி மாதத்திற்கு மூன்று முறையும்,வாரத்திற்கு ஒரு முறையும் வர ஆரம்பிக்கும். இப்படி அடிக்கடி தலைவலி வந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். தலைவலிக்கு இயற்கை வைத்திய மூலம் சரி செய்யலாம் .எப்படி தலைவலி வந்தால் சரிசெய்யலாம் என்பதை இப்பதிவில் காணலாம்.
- தண்ணீர் அதிகமாக குடிக்கவேண்டும். தண்ணீர் குடிப்பதை குறைத்தால் தலைவலி அதிகமாக வரும். தலைவலி மட்டும் அல்ல மற்ற எந்தவிதமான நோய்களும் வராது.
- அதிகமான கோபம், கவலை, மன அழுத்தம், தூக்கம் இல்லாமல் இருத்தல் ,படபடப்பு இருந்தாலும் தலைவலி வரும். அடிபட்டு தலையில் ஏதாவது கட்டி இருந்தால், மூளையில் கட்டி இருந்தாலும் வர வாய்ப்பு உள்ளது.
- கொதிக்கும் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள்,வேப்பிலை போட்டு ஆவி பிடித்து வந்தால் தலையில் உள்ள கெட்ட நீர் வெளியேறி தலைவலி குறைய தொடங்கும்.
- தலையின் முன் பகுதியில் தலைவலி அதிகம் இருந்தால், நன்றாக தூங்கி எழுந்தால் உடனே சரியாகும்.
- ஒற்றை தலைவலி இருக்கும் பொது கடு டீ குடித்து தூங்கி எழுந்தால் தலைவலி குறையும்.
- ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிட தவறினால் கூட தலைவலி வரும். அதனால் மூன்று வேலையும் சரியாக சாப்பிடவேண்டும் .சீரான இடைவெளி இல்லாமல் சாப்பிட்டு வந்தால் தலைவலி வருவதை தடுக்கலாம்.
- மது அருந்துபவருக்கு ஒற்றை தலைவலி வரும். இதனால் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.
