ஆயுர்வேத காலத்தில் பிராமி இலை என்பது மன அழுத்தத்தை குறைக்கும் என சொல்லப்படுகிறது. வல்லாரை என அழைக்கப்படும் இது கூந்தலின் வளர்ச்சியை அதிகபடுத்தும். இந்த வல்லாரை முடியின் வேர்களை வலுபடுத்தி இளநரையை போக்க உதவுகிறது. இந்த வல்லாரையை கொண்டு முடி வளர தைலம் தயாரிக்க பயன்படுகிறது.
வல்லாரையினால் தயாரிக்கப்படும் எண்ணெய் கூந்தல் பராமரிப்புக்கு உதவுகிறது. இது ஷாம்பு மற்றும் கண்டிஷனர் தயாரிக்க மூல பொருட்களாக தயாரிக்க பயன்படுகிறது.
பிராமி எண்ணெய் தயாரிக்கும் முறைகளும் பயன்களும் :
தேவையான பொருள்கள் :
- வல்லாரை இலைகள் -1 கப்
- தேங்காய் எண்ணெய் / எள் எண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 1 கப்
- கண்ணாடி பாட்டில் – 1
தயாரிக்கும் விதி:
- வல்லாரை இலைகளை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்
- கண்ணாடி பாட்டிலில் எண்ணெய்யை ஊற்றி அதில் இலைகளை போடவும்
- இலைகளை முழுமையாக எண்ணையில் ஊற வைக்க வேண்டும்.
- பாட்டிலே நல்ல இறுக்கமாக மூடி தினமும் வெயிலில் 6-8 மணி நேரம் வைத்து நன்கு குலுக்க வேண்டும்.
- இந்த மாதிரே 2 வரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
- எண்ணெய்யை வடிகட்டி சுத்தமான பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும்.
வல்லாரை எண்ணெய்யின் முக்கிய நன்மைகள் :
முடி வளர்ச்சியின் பயன்கள் :
வல்லாரை இரத்த ஓட்டத்தை அதிகரித்து புதிய முடி வளர்ச்சியை வளர வைக்கிறது.
முடி உதிர்தலை குறைக்கும் :
முடி வேர்களுக்கு தேவையான ஊடசத்தை அளித்து வேர்களை வலுபடுத்துகிறது .
நம் உடலின் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து முடி உதிர்வதை தடுக்க உதவுகிறது.
வறட்சி மற்றும் அரிப்புக்கு தீர்வு:
நம் உச்சந்தலையில் ஈரப்தத்தை சரி செய்து அரிப்பு,வறட்சி,அழற்சி போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
முடி பிளவுகளை குறைக்கும் :
நுனி முடி உதிர்வதை தடுக்க இந்த வல்லாரை எண்ணெய் உதவுகிறது .மேலும் இதை வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் முடிகளில் ஏற்படும் பிளவுகளை குறைக்க உதவுகிறது.
முடியின் நன்மைகள்:
சாயம் பயன்பாட்டால் அதில் ஏற்படும் வறட்சி மற்றும் சேதத்தை சரி செய்து ஈரப்பதம் அளித்து உதவுகிறது.
- வாரத்தில் 2 முறை வல்லாரை எண்ணெய்யை சிறிதளவு எடுத்து உச்சந்தலையில் மெதுவாக தேய்த்து வர வேண்டும் .
- 1 மணி நேரம் கழித்து இயற்கையான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
- முனை முடிக்கு வல்லாரை எண்ணெய்யை தேய்த்து வந்தால் முடி உதிவது நன்றாக குறையும் .
குறிப்புகள்:
- பெரியவர்கள் , குழந்தைகள் , ஆண்கள் பெண்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.
- எண்ணெய்யை நம் 2 மாதத்திற்கு மேலாக பயன்படுத்த வேண்டுமானால் காய்ந்த வல்லாரை இலைகளைக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.
- எண்ணெய்யை வெயிலில் வைத்து கொள்ள முடியாவிட்டால் குறைந்தது 10-15 நிமிடம் நன்கு காய்ச்சி வடிகட்டி வைக்க வேண்டும்.
