பெண்களுக்கு தலைமுடி உதிர்வது மிக பெரும் பிரச்சனையாக உள்ளது. அதிக முடி உதிர்வதால் தலை சொட்டையாகி விடுமோ என்ற பயம் பெண்களுக்கு அதிகம் உள்ளது. பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் இந்த கவலை உள்ளது. தலை முடி அதிகம் உதிர்வதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.
முடி உதிர்வதற்கு காரணம் :
நம் உடம்பில் அதிக சூட்டின் காரணமாக முடி கொட்ட தொடங்கும். தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதை தவிர்க்க வேண்டும். போதிய ஊட்டசத்து இல்லாத காரணத்திலும் முடி கொட்ட தொடங்கும். அதிகமான சுடு தண்ணீர் தலைக்கு ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். தலையில் பொடுகு தொல்லை இருந்தாலும்,சரிவர தலையை பாராமரிப்பு இல்லையென்றாலும்,முடி அதிகம் கொட்டும். மன அழுத்தத்தின் காரணமாகவும் முடி உதிர்வது அதிகமாகும். அதிகம் கவலை படக்கூடாது. குழந்தை பிறந்ததும் முடி கொட்ட தொடங்கும். நம் உடம்பில் இரத்த சிப்பனுக்கள் குறைவதாலும் முடி உதிரும். இதனை தடுப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன.அதை பற்றி கீழே பார்ப்போம்,
தடுக்கும் வழி முறைகள்:
நாம் எப்போதும் சத்தான உணவை சாப்பிட வேண்டும். கீரைகள்,பழங்கள் ,காய்கறிகள் நம் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உணவில் தூக்கி எரிய கூடிய கறிவேப்பிலையை சாப்பிட்டால் முடி நீளமாக வளரும். தலையை எப்போதும் எண்ணெய் தேய்த்து சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நாம் அன்றாட வீட்டில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளை வைத்து தலையில் வழுக்கை இருந்தாலும் கூட அதில் முடி வளர ஆரமிக்கும். அந்த பொருள் என்னவென்றால் சின்ன வெங்காயம்தான்,பத்து சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதை நன்கு மிக்ஸியில் தண்ணீர் ஊற்றமால் அரைத்து சாரு எடுக்கவேண்டும். இந்த சாரை நம் தலையில் தேய்த்துஅரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் போதும். இதை போல் ஆறு மாதம் செய்தால் போதும்.முடி வழுக்கை இருந்த இடத்தில் முடி வளர ஆரம்பிக்கும். இதை போல் செய்து பாருங்கள்.
