பித்த வெடிப்பின் காரணமாக நம் கால்களின் அழகை இழக்க நேரிடும். பாதத்தில் வெடிப்பு ஏற்படும்போது நம் நடப்பதில் வலிகள் ஏற்படும். உடம்பில் தண்ணீர் சத்து குறைவதன் காரணமாக பாதத்தில் வெடிப்பு தோன்றுகிறது. தோல் வறட்சி காரணமாகவும் வெடிப்பு தோன்றுகிறது. நம் காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். தோல் மிகவும் வறண்டு போவதாலும் வெடிப்பு உண்டாகும். வயதாகும் போது சருமத்தின் தோள்கள் மிகவும் வறண்டுவிடுகிறது. இதனால் நம் கால்களில் வெடிப்பு உண்டாகிறது. உடல் எடை அதிகம் உள்ளவர்க்கும் ,அதிக நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கும் வெடிப்பு உருவாக வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம்.
பித்த வெடிப்பு வராமல் தடுப்பதற்கு :
- நம் கால்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . கற்கள் இருக்கும் இடத்தில் வெறும் காலுடன் நடப்பதை தவிருக்க வேண்டும்.
- சிறிது கல் உப்பு, தண்ணீருடன் சேர்த்து மிதமான சூட்டில் நம் கால்களை வைக்க வேண்டும்.இப்படி வைப்பதால் நம் கால்களில் உள்ள மண்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
- தினமும் இரவில் சிறிது தேங்காய் எண்ணெய்யுடன் ,சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள் கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் போட வேண்டும். இப்படி போடுவதால் வெடிப்புகள் மறைந்துவிடும்.
- தேங்காய்எண்ணெய் மிதமாக சூடு ஏற்ற வேண்டும் . பிறகு அதை காலின் பாதங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வர வெடிப்புகள் வராது .
- வேப்பிலையை அரைத்து பாதத்தில் தடவ வேண்டும். பிறகு அதை உலர்ந்ததும் கழுவ வேண்டும் .இப்படி வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் பாதத்தில் உள்ள பிரச்சனைகள் அகன்று விடும்.
- பப்பாளி பழத்தை சிறிது எடுத்து அதை மசித்து பாதத்தில் தடவ வேண்டும். இப்படி தடவுவதால் பாதத்தில் உள்ள வெடிப்பு மறைந்து விடும்.
- ஆலிவ் எண்ணெய், மற்றும் தேங்காய்எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
- அதிகமாக காபி ,டீ குடிப்பதை தவிர்கவேண்டும் . ஏன் என்றால் பித்தம் அதிகமாக இருந்தால் வெடிப்புகள் உருவாகும் . பித்தம் வராமல் பார்த்து கொள்வது நல்லது. உங்க பாதத்தில் பித்த வெடிப்பு வராமல் தடுப்பதற்கு மேலே உள்ள டிப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்.
