முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம்

சுய தொழில் செய்ய நினைக்கும் வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் உழவர் நல சேவை மையம் தொடங்குவதற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழக அரசின் முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கல்லூரிகளில் படித்து ஒவ்வொரு ஆண்டும் 4,000 வேளாண் பட்டதாரிகளும் 600க்கு மேற்பட்ட பட்டயதாரர்களும் படிப்பை முடித்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு தனியார் அரசு நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை அளிக்கின்றன. சுய தொழில் கனவை நனவாக்கும் விவசாயிகளுக்கு உதவ தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம்.

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம்:

விவசாயிகளின் வாழ்வு சிறக்கவும் விவசாய தொழிலை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. வேளாண் மற்றும் பட்டய படிப்பை முடித்த இளைஞர்களின் படிப்பறிவும் தொழில் நுட்பத்திறனும் விவசாயிகளுக்கு உதவ கொண்டுவரப்பட்ட திட்டமே ” முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டம்”. இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு உழவர் நல மையங்கள் அமைக்க மானியமும் வேளாண் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 1,000 உழவர் நல மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தின் முக்கிய நன்மைகள்:

இந்த காலத்தில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதை இளைஞர்களின் மிகப் பெரிய கனவாக இருந்து வருகிறது. அதிலும் படித்ததற்கு உண்டான தொழில் செய்வதில் ஆர்வம் அதிகம் உள்ளது. சொந்த தொழில் தொடங்கும் வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் உழவர் நல சேவை மையம் அமைப்பதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையம் அமைக்க 30 சதவீதம் மானியம் அரசு வழங்குகிறது.

உழவர் நல சேவை மையத்தின் பயன்கள்:

விவசாயிகளுக்கு வேளாண்மைக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிகொல்லிகள் உட்பட விற்பனை செய்யப்படும். அது மட்டுமல்லாமல் வேளாண் உற்பத்தியை பெருக்கவும் பயிர்களில் ஏற்படும் நோய் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கிறது. அத்துடன் தொழிநுட்பங்கள் வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டுதல் மையத்திலேயே வழங்கப்படும்

உழவர் நல சேவை மையம் மானியம் பெற தகுதிகள்:

இந்த திட்டத்தில் பயன் பெற விண்ணப்பதாரர் தோட்டக்கலை அல்லது வேளாண்மை அல்லது வேளாண் வாணிகம் அல்லது வேளாண் பொறியியலில் பட்டபடிப்பு மற்றும் பட்டயபடிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கணிணி திறன் பெற்றிருக்க வேண்டும். வங்கி மூலமாக கடன் பெற்ற நிறுவனத்தின் உரிமையானது தனி உரிமையாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியில் இருக்க கூடாது. ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெற முடியும்.

உழவர் நல சேவை மையம் மானியத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள்:

  • 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்
  • பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • ஆதார் அட்டை
  • பான்கார்டு
  • சாதி சான்றிதழ்
  • சரக்கு மற்றும் சேவை வரி எண் (GST NO)
  • வங்கி கணக்கு புத்தகம்
  • வங்கியில் இருந்துபெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம்
  • விரிவான திட்ட அறிக்கை

உழவர் நல சேவை மையம் மானியத்துக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் நபர்கள் முதலில் ரூ. 10 லட்சம் அல்லது ரூ. 20 லட்சம் மதிப்பில் உழவர் நல சேவை மையம் நிறுவதற்கு உண்டான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வின்னப்பதாரரும் விற்பனை உரிமம், உரம், மற்றும் பூச்சிகொல்லி விற்பனை செய்வதற்க்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *