உங்க கண்களை சுற்றி கருவளையம் இருக்குன்னு கவலையா? அப்போ உடனே இதை செய்ங்க!

பொதுவாக கருவளையம் என்பது ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் வரக்கூடியது. கண்களில் கருவளையம் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம் தூக்கமின்மை. இது ஒரு அழகு சார்ந்த பிரச்சனை ஆகும். முதுமை, மற்றும் மரபியல் காரணமாக ஒரு சிலருக்கு கருவளையம் தோன்றும். கண்களுக்கு கீழே தோல் மெலியதாக காணப்படும். இதனால் இரத்த நாளங்கள் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வாமை எதிர்வினைகள் காரணமாக கண்களில் தேய்த்தல், அரிப்புகளை ஏற்படும். இதனால் கண்களில் கருவளையம் அதிகமாகும். தோள்களில் தடிப்பு ,இரத்த சோகை ,தைராய்டு காரணமாகவும் கருவளையம் உருவாகலாம் .இதை தடுப்பதற்கு என்ன வலி என்பதை பார்க்கலாம்.

  • இரவில் அதிக நேரம் தூங்காமல் இருந்தால் கண்களில் கருவளையம் தோன்றும். அதனால் தினமும் அதிக நேரம் டிவி பார்ப்பது ,செல்போன் பார்ப்பது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் .
  • கவலைகள் அதிகம் இருந்தாலும் , மனஅழுத்தத்தினாலும் கருவளையம் வர ஆரம்பிக்கும். அதனால் நாம் எப்போதும் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
  • கருவளையம் வராமல் இருக்க நீர் சத்து அதிகமுள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளவேண்டும். வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும்.
  • தினமும் தூங்கும்போது தேங்காய் எண்ணையை கண்களில் உள்ள கருவளையத்தில் தடவி விட்டு தூங்கவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருவளையம் சிறிது சிறிதாக நீங்கும்.
  • சிறிது தயிருடன் , சிறிது மஞ்சள் தூள் நன்றாக சேர்த்து கருவளையத்தில் தடவி வந்தால் மூன்று நாட்களில் சரியாகிவிடும் .
  • ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை தொட்டு கண் இமைகளில் முப்பது நிமிடங்கள் வைக்க வேண்டும் . இது சருமத்தை பராமரித்து புத்துணர்ச்சி ஆக்கும்.இதே போல் வாரத்தில் இரண்டு தடவை செய்து வந்தால் போதும்.
  • உருளைக்கிழங்கு ,மற்றும் வெள்ளரிக்காய் கண்களில் உள்ள கருவளையத்தை போக்க கூடியது. உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி நம் கண்களில் வைக்க வேண்டும். இப்படி பத்து நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் . இதே போல் வாரத்தில் இரண்டு தடவை செய்ய வேண்டும் .
  • குளிர்ந்த பாலில் சுத்தமான காட்டன் துணியில் தொட்டு கண்களில் உள்ள கருவளையத்தில் வைக்க வேண்டும் . பத்து நிமிடம் கழித்து வெறும் தண்ணீரில் கழுவ வேண்டும். பாலில் சருமத்தை ஒளிர செய்யும் பண்புகள் இதில் அதிகம் உள்ளது.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *