EPFO அதாவது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(Employees’ Provident Fund Organisation).தொழிலாளர் நலனுக்காக வருங்கால வாய்ப்பு நிதி PF திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது.இந்த PF கணக்கில் தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் பணியாற்றும் நிறுவனம் மூலம் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.இதனிடையே டெல்லியில் நடைபெற்றஆலோசனை கூட்டத்தில் வருங்கால வாய்ப்பு நிதி திட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.இதுல முக்கியமான அறிவிப்ப வெளியிட்டுள்ளார்கள்.அது என்னென்னா ஊழியர்கள் PF பணத்த எடுக்குற விதிமுறைகள சில தளர்வுகள் அறிமுகம் செஞ்சுருக்காங்க.PF பயனாளர்கள் தங்களோட கணக்குல 100% பணத்த திரும்ப பெற ஒப்புதல் அளிக்கபட்டது.இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் செலுத்திய தொகையை பயனாளர்கள் முழுவதுமாக திரும்ப பெற முடியும்.
- இதுக்கு முன்னாடி பணியாளர்களோட பங்களிப்புல 90% வரைக்குமான தொகையை மட்டுமே எடுக்க முடியும்.ஆனா இப்போ பணியாளர்,நிறுவனம் பங்களிப்புல 100% தொகையையும் எடுக்குற தளர்வு அறிவிச்சுருக்காங்க.
- முன்பு திருமணம்,கல்வி,மற்ற காரணங்கள் சிறப்பு சூழல்கள் போன்ற பிரிவுகளின் காரணம்; இது அனைத்திற்குமே மொத்தம் 3 முறைதான் பணத்தை எடுக்க முடியும்.இப்போ கல்விக்கு 10 முறை,திருமண தேவைக்கு 5 முறை எடுப்பதற்கான விதிமுறைகள் இருக்கு.
- முன்பு சில காரணங்களுக்காக மட்டும்தான் 1 வருடம் பணியாற்றிருக்க வேண்டும்.அதாவது வீடு கட்டுவதற்கு 90% தொகை எடுக்கணும்னா 5 ஆண்டுகள் வரைக்கும் வேலை செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.ஆனால் இப்போ அனைத்து காரணங்களுக்கும் 1 வருடம் வேலை பார்த்து உங்களுடைய PF அக்கௌன்ட் ஆக்டிவா இருந்தால் போதுமானது என்ற தளர்வுகள் இப்போ இருக்கு.
- சிறப்பு சூழல்களில் என்ன காரணத்திற்காக பணம் எடுக்குறோம்னு குறிப்பிடணும்.ஆனால் இப்போ என்ன காரணம்னு குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.அதுனால நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
- முன்பு முன்கூட்டியே இறுதி PF ஒப்படைப்பு காலம் 2 மாதமாக இருந்தது.இப்போ வந்து அது 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஒட்டுமொத்தமாக உங்களோட PF அக்கௌன்ட் அ Close பண்ணனும்ங்கிற பட்சத்துல கடைசி PF ஒப்படைப்பு காலம் 2 மாதமாக இருந்தது.தற்போது 36 மாதங்களாக அறிவிச்சுருக்காங்க.
