இனி அனைவரும் வீட்டிலேயே இதை செய்ங்க! இனி! சளி, இருமல் வரவே வராது! தெரியுமா?

சளி பெரும்பாலும் வைரஸ் தொற்றுகளால் உருவாகிறது. அதிகமான சளி இருந்தால் இருமல் வரும். இதனால் காய்ச்சல் வரக்கூடிய சுழ்நிலை ஏற்படும். புகை பிடித்தல் காரணமாகவும், காற்று மாசுபடுத்தல்,மற்ற வேறு சில காரணத்திலும் சளியின் உற்பத்தி அதிகமாகிறது. நுரையீரலில் அதிக சளி இருந்தால் மூச்சுதிணறல், இருமல், மார்ப்பு வலி அதிகம் ஏற்படும். இதன் விளைவால் இரத்தத்துடன் கலந்து சளி வரும். இதனுடன் காய்ச்சல், உடல் சோர்வு இப்படியே பத்து நாட்களுக்கு நீடித்தல் மருத்துவரை பார்க்க வேண்டும். சளியை குறைப்பதற்கு இருக்க சில வழிகள் உள்ளது .

  • சின்ன வெங்காயத்தை நெருப்பில் சுட்டு அதை சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும். சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் எப்போதும் தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்தால் நல்லது.
  • வறட்டு இருமல் அதிகமாக இருந்தால் சிறிது மிளகு,அதனுடன் பொரிகடலை சேர்த்து பொடி செய்து வாயில் ஓரத்தில் ஒதுக்கவேண்டும். இப்படி செய்து வந்தால் வறட்டு இருமல் குறையும்.
  • வெற்றிலையுடன் சூடத்தை வாட்டி நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குறையும்.
  • துளசி, ஓமவள்ளிஇலை, தூதுவளை இதை எல்லாம் சேர்த்து கசாயம் செய்து குடித்து வந்தால் இருமல் ,சளி ,காய்ச்சல் குறைந்து விடும்.
  • தும்பை இலையை தண்ணீர்லில் கொதிக்கவிட்டு அந்த தண்ணீரை அப்படியே குடித்து வர சளி குறையும்.
  • மிளகு தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டு பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • தூதுவளையுடன் ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குணமடையும்.
Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *