மத்திய அரசின் சென்ட் கல்யாணி திட்டம்:

பெண்கள் சுயதொழில் செய்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வாங்க முடியாமல் இருக்கும் பெண்களுக்கு ரூ 1 கோடி வரை வணிகக்கடன் வழங்கும் திட்டமே சென்ட் கல்யாணி திட்டமாகும். நாட்டில் சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு கடன் உதவி வழங்குவதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எந்தவொரு தொழில் வளர்ச்சியையும் தடுக்க கூடாது என்பதற்காக இந்தியா அரசாங்கம் செயல்படுத்தி வரும் வங்கிக்கடன் திட்டம்தான் சென்ட் கல்யாணி திட்டம். இந்த திட்டத்தின் நன்மைகள் தகுதி வரம்புகள், நோக்கங்கள், வட்டி விகிதங்கள், கடன் சலுகைகள் விண்ணப்பிக்கும் முறை போன்றவை இந்த பதிவில் காண்போம்.

சென்ட் கல்யாணி திட்டம் என்றால் என்ன?

பெண் தொழில் செய்யும் முனைவோர் புதுமைகளை முன்னெடுப்பதிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கு வகுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் தொழில் தொடங்குவதற்கு பணம்தா ஒரு பெரிய பற்றாக்குறையாக இருக்கிறது. அவர்களின் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஸ்டார்ட் அப் இந்தியாவின் கீழ் சென்ட் கல்யாணி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பெண் தொழில் முனைவோருக்கு வணிகக் கடன் வழங்குகிறது.

சென்ட் கல்யாணி திட்டத்தின் நோக்கம்

சென்ட் கல்யாணி திட்டத்தின் முக்கிய நோக்கம் நிதி தேவைப்படும் பெண்களுக்கு பெண் தொழில் முனைவோர்களை கண்டறிந்து புதிய தொழில் தொடங்கவும் தொழிலை விரிவுப்படுத்தவும் தொழிலை நவினமையமாக்கவும் இணையில்லா வங்கி கடன் வழங்கவும் உதவுகிறது.

சென்ட் கல்யாணி திட்டத்தின் நன்மைகள்

இந்த திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்கு Business செய்வதற்கு தேவையான உதவி மட்டும் காலக் கடன் அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை கடன் வழங்குகிறது.இந்த திட்டத்தில் பெறப்படும் கடன்களுக்கு செயலாக்க கட்டணம் கிடையாது. சென்ட் கல்யாணி திட்டத்தின் மூலம் பெறப்படும் கடன்களுக்கு ரூ. 10 லட்சம் வரை இருந்தால் வட்டி விகிதத்தில் சலுகை கிடைக்கும்.

சென்ட் கல்யாணி திட்டத்தின் கடன் வரம்பு & வட்டி விகிதம் :

கடன் வரம்பு:

இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. வாங்கும் கடன் திட்டத்தில் 20 சதவீதம் வரை கடன் வாங்குபவர் வைத்து இருக்க வேண்டும். அதாவது தொழில் தொடங்க ரூ. 20 லட்சம் செலவாகும் எனில், அதில் 80 சதவீதத்தை ( ரூ 16 லட்சம்) மட்டும் வழங்கி மீதம் 20 சதவீதத்தை (ரூ .4 லட்சம்) கடன் பெறுவார் வைத்திருக்க வேண்டும்.

வட்டி விகிதம் :

இந்த திட்டத்தில் கடன் வாங்கி அசல் தொகையை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும். ரூ 10 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 0.25%(MCLR+0.25%) வசூலிக்கப்படுகிறது. அதேபோல் ரூ. 10 லட்சம் முதல் 1 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி விகிதம் 0.50% (MCLR+0.50%) வசூலிக்கப்படுகிறது.

சென்ட் கல்யாணி திட்டத்திற்க்கு தகுதி வரம்புகள்:

இந்த திட்டத்தின் கீழ் Business பெற விண்ணப்பதாரர் ஒரு தொழில்முறை நிபுணராகவோ, வணிக உரிமையாளராகவோ அல்லது சுய தொழில் செய்யும் பெண்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சிறு குறு நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் வங்கியில் சமர்பிக்க Business Proposal கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

சென்ட் கல்யாணி திட்டத்திற்கு தகுதியான துறைகள்:

சென்ட் கல்யாணி திட்டத்தில் பின்வரும் துறைகளில் மட்டுமே Business loan பெற முடியும்.

கைத்தறி தொழில் செய்பவர்கள், உணவு பதப்படுத்துதல் , ஜவுளித்தொழில், கைவினைப் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி தொழில் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் மருத்துவர், வலக்கறிஞர், பொறியாளர், பேஷன் டிசைனர், அலகுகலை நிபுணர்ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் பியூட்டி நிலையங்கள் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் நூலகம் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தும் பெண்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சென்ட் கல்யாணி திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்க முடியாது:

கடைக்காரர்கள் மற்றும் மளிகைக்கடை உரிமையாளர்கள் போன்ற சில்லறை வணிகங்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை நடத்தும் பெண்கள் சுயஉதவிக் குளுக்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது

சென்ட் கல்யாணி திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் கார்டு
  • பான் கார்டு
  • வாக்காளர் அடையாள அட்டை
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • ஜிஎஸ்டி பதிவுச் சான்றிதழ்
  • திட்ட அறிக்கைகள்

சென்ட் கல்யாணி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி:

இந்த திட்டத்தின் கீழ் கடன் தொகை பெற விரும்பும் பெண்கள் அனைத்து ஆவணங்களையும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி நேரில் சென்று அங்கு விண்ணப்பபடிவத்தை வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *