✋ ஊழல் என்றால் என்ன?
அரசு அலுவலகங்களில் மக்கள் சேவையை பெறும் போது அதிகாரிகள் லஞ்சம் கேட்பது அல்லது சட்டத்திற்கு விரோதமாக சலுகை தருவதற்காக பணம் வாங்குவது தான் ஊழல். இது ஒரு குற்றம்.
ஊழல் காரணமாக மக்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, சமூக வளர்ச்சி தடைப்படுகின்றது. இதனை தடுப்பதற்காகவே தமிழ்நாடு அரசு – லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை (Vigilance & Anti-Corruption Department – V&AC) இயங்கி வருகிறது.
📌 மக்கள் எப்படிச் செயல்படலாம்?
- லஞ்சம் கேட்கப்பட்டாலோ, ஊழல் நடந்தாலோ உடனடியாக புகார் செய்யுங்கள்.
- ஒலி பதிவு, வீடியோ, சான்றுகள் இருந்தால் அவற்றை பாதுகாத்து வையுங்கள்.
- சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். (ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும்)
- அரசு அலுவலகத்திற்கு நேரடியாக புகார் மனு கொடுக்க வேண்டாம்.
- லஞ்ச ஒழிப்பு துறைக்கு நேரடியாக மட்டும் தகவல் அளிக்கவும்.
- உங்கள் தகவல் முழுமையாக ரகசியமாகவே கையாளப்படும்.
