Apple iPhone 17 Series அறிமுகம் – உலகையே கவர்ந்த புதிய அம்சங்கள்!

உலகம் முழுவதும் தற்போது தொழிநுட்ப பிரியர்களின் கவனம் Apple iPhone Seires 17 மீது உள்ளது.உலகபுகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தனது Apple iPhone Model ஐ அறிமுகம் செய்தது.அது முதல் தனது பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.அதாவது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் Apple நிறுவனம் தனது புதிய மாடல்களை Launch செய்வது வழக்கம்.அதுபோலவே 2025 செப்டம்பர் மாதம் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

நேற்று செப்டம்பர் 9 அன்று அமெரிக்காவில் நடைபெற்ற “Awe Dropping” என்ற நிகழ்வில் பெரிய அளவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல விசயங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது.அந்த நிகழ்வில் iPhone Series 17- Mobile Phone,Apple Watch Series,மற்றும் Airpods Pro 3 என பல புதிய பொருட்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வந்திருக்கின்றன.

இந்த வகையில் இதுவரை வெளியான iPhone Series களில் இல்லாத அளவில் மிகவும் மெலிதான Apple 17 iPhone Series ஐ நிறுவனம் வெளியிட்டது.iPhone 17,iPhone 17 Air,iPhone 17 Pro, மற்றும் iPhone 17 Pro Max என4 மாடல்களில் வெளியாகி உள்ளன.இதுமட்டுமில்லாமல் Apple Watch Series 11,Apple Watch Ultra 3 தொடங்கி Airpods Pro 3 வரை பல்வேறு தயாரிப்புகள் அறிமுகமாக உள்ளன.

மேலும் கடந்த 2 வருடங்களாக இபோன் மாடல்களில் டைட்டானியம் பயன்படுத்தப்பட்டது.ஆனால் இந்த முறை டைட்டானியத்திலிருந்து அலுமினியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதற்க்கான முன்பதிவு வருகிற செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்குகிறது மற்றும் செப்டம்பர் 19ஆம் தேதி சந்தைகளில் விற்பனைக்கு வரும் எனவும்,செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அனைத்து ஆப்பிள் இபோன்கள் ஸ்டோர்களில்கிடைக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.இனி வரும் அடுத்த பதிவுகளில் Apple iPhone Series 17 பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *