Apple Event அமெரிக்கவில் செப்டம்பர் 9 அன்று நடத்திய “Awe Dropping” நிகழ்வில் புதிய Headphone Apple Airpods Pro 3 ஐ அறிமுகம் செய்துள்ளது.இந்த Premium Airpods Wireless Headset ல புது Help Tracking Features மற்றும் Infra Red சென்சாரோட இதுவரை இல்லாத வரவுகள ரொம்பவே Advanced Version Airpods ஆ இருக்கும்னு எதிர்பார்க்கபடுகிறது.பல வருசமா Apple ஓட Airpods Pro ல எந்த மாற்றமும் இல்லாமதா இருக்கு அதனால இந்த புது Airpods Pro 3 ரொம்பவே மக்களிடையே எதிர்பார்க்கபடுகிறது.
Airpods Pro 3 நவீனமாக வடிவமைக்கபட்டு,வேகமான H3 Chip இருக்குனு சொல்றாங்க.அதுபோக சிறந்த Active Noice Cancellation ஓட வரும்னு எதிர்பார்க்கபடுகிறது.
Airpods Pro 3 இன் சிறப்பம்சங்கள்:
- Live Translation – நாம மொழி தெரியாத இடத்திற்கோ அல்லது மற்ற நாடுகளுக்கோ செல்லும்போது அவர்கள் பேசும் மொழி நமக்கு தெரியாது,அவர்கள் பேசினாலும் நமக்கு புரியாது.இனி அந்த சிரமமில்லாத வகையில் ஆப்பிள் Airpods Pro 3 இல் மற்றவர்கள் பேசும் மொழியினை நமக்கு தெரிந்த மொழியில் Translation செய்து தரும்.அதாவது Airpods Pro 3 ஐ நம் காதில் வைக்கும்போது மற்றவர்கள் பேசும் மொழியினை recognise செய்து நமக்கு புரியும் வகையில் Language Translation செய்து கொடுக்கும்.இப்போதைக்கு ஆங்கிலம்,பிரெஞ்சு,ஜெர்மனி,ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளுக்கு மட்டும்தான் இந்த வசதி செய்திருக்காங்க.இந்த வருஷம் இறுதிக்குள் இன்னும் பல மொழிகள் சேர்க்கபோறதா ஆப்பிள் நிறுவனம் சொல்லிருக்காங்க.
- Sound Quality – வெளியில இருக்குற மற்ற Sound எதையுமே நம் காதின் உள்ளே கேட்காமல்,நாம கேட்க கூடிய பாட்டு மட்டும் தெளிவாக கேட்கும் அளவுக்கு Active Noice Cancellation வசதியும் இதுல இருக்கு.
- 50+ Exercise Mode – நீங்க Fitness பிரியர்களாக இருநந்திங்கனா உங்களுக்கு இது ரொம்பவே Useful ஆ இருக்கும்.அதாவது உங்களுடைய இதயத்துடிப்பு எவ்வளவு கலோரிகளை எரிச்சுருக்குனு Apple Airpods Pro 3 யே Track பண்ணி உங்களுடைய iPhoneக்கு Data எல்லாத்தையும் அனுப்பிடும்.
- 8 hours of battery life with Active Noise Cancellation on a single charge
Price
- MRP Rs.25900 or Rs.4150/mo. with instant cashback and no cost EMI
