எறும்பு தொல்லை வீட்டில் அதிகமாக இருக்கு என்று கவலை படுபவர்கள் அதிகம். பொதுவாக அனைத்து வீடுகளிலும் வரக்கூடியது எறும்பு. எறும்புகளில் கருப்பு எறும்பு, சிவப்பு எறும்புகள் உள்ளன. நம் வீட்டில் இன்னிப்பு தின்பண்டங்கள் சிதறி கிடந்ததால் சிவப்பு எறும்புகள் அதிகம் வரும். நம் வீடு சுத்தமாக இல்லை என்றால் சிவப்பு எறும்புகள் வர ஆரமிக்கும். இந்த எறும்பு கடித்தால் மிகவும் வலிக்கும் . ஆனால் கருப்பு எறும்பு கடிக்காது.இது வந்து சாமி எறும்புன்னு சொல்லுவார்கள். சுத்தமான இடத்திலும் ,குளிர்ந்த இடத்திலும் இந்த எறும்புகள் வரும். எறும்புகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
எறும்பு தொல்லையிலிருந்து வீட்டை பாதுகாக்கும் எளிய வழிகள்:
- தண்ணீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து வீடு முழுவதும் தெளிக்கவேண்டும். இப்படி தெளித்தால் எறும்புகள் வராது.
- வீடு சுத்தமாக வைத்திருந்தால் எறும்புகள் உணவு பொருட்களை தேடி வருவது குறையும்.
- புதினா இலைகலை வெட்டி எறும்புகள் இருக்கும் இடத்தில் போட்டால் எறும்புகள் வருவது குறையும்.
- தண்ணீர்யுடன் சிறிது மிளகுதூள் , கல் உப்பு சேர்த்து கரைத்து எறும்புகள் இருக்கும் கூட்டத்தில் தெளித்தால் எறும்புகளின் நடமாட்டம் குறையும்.
- சுண்ணாம்புக் கல்லை எடுத்து எறும்புகள் இருக்கும் இடத்தில் ஒரு கோடு போட்டால் வந்தால் எறும்புகள் வரவே வராது.இதே மாதிரி சமையலறையிலும் தி போல் கோடு போட வேண்டும்.
- எறும்புகள் இருக்கும் இடத்தில் காபி தூளை தூவினால் எறும்புகள் வருவது குறையும்.
- நம் வீட்டிலில் உள்ள எறும்புகளை விரட்டுவதற்கு வேப்ப எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்ப எண்ணெய் எளிதாக கிடைக்க கூடியது. எறும்புகள் இருக்கும் இடத்தில் வேப்ப எண்ணெய்யை ஊற்ற வேண்டும்.இப்படி செய்வதால் எறும்புகள் வரவே வராது.
- இலவங்கப் பட்டை எறும்பை விரட்டுவதற்கு சிறந்த வழிமுறை ஆகும். இலவங்கப் பட்டை வாசனைக்கு எறும்புகள் உள்ளளே வரவே வராது.இதலெல்லாம் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் வீட்டில் உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகம் இருக்காது.
