நெல்லிக்காய் – நோயெதிர்ப்பு சக்தி & உடல் ஆரோக்கியத்திற்கு இயற்கை மருந்து

நெல்லிக்காய் சாப்பிடுவதனால் நம் உடல் வலிமை பெறுகின்றன. இது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை  பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயில் ஏற்படும் 7 அற்புத நன்மைகள்

நோயெதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின் C :

நெல்லிக்காய் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு நெல்லிக்காயில் 600-700 mg வரை வைட்டமின் C உள்ளது. இது சளி, இருமல், மற்றும் அலர்ஜி வீக்கம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காயில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. 

மூளை மற்றும் கண்கள் :

நெல்லிக்காய் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மிகவும் பாதுகாக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டுவந்தால் நம் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.நெல்லிக்காய் சாப்பிடுவதால் நம் ஞாபகசக்தி அதிகரிக்கும்.நெல்லிக்காயில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் நம் நினைவாற்றலும் அதிகரிக்கும்.

இதய ஆரோக்கியம் : 

இதய நோய் வராமல் தடுக்க நெல்லிக்காய் உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள நார்சத்து மற்றும் பொட்டாசியம் நம் நம் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறதுஅதோடு நம் இரத்ததில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

செரிமானம்:

நெல்லிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு வழி வகுப்பதில் முக்கியமானதாகும். இதில் உள்ள நார்சத்து, அமிலத்தன்மை வயிற்று கோளாறுகளை போக்குவதில் நமக்கு நன்மை பயக்கும். இது குடலை சுத்தம் செய்து வயிற்றில் உள்ள பாக்டிரியக்களை சீர்படுத்துகிறது.

முடி வளர்ச்சி:    

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நம் முடிஉதிர்வதை தடுக்கலாம். மேலும் முடிகளின் வேர்களை வலுபடுத்தி வளர வைக்கிறது. நெல்லிக்காய்  சாப்பிட்டு வந்தால் நம் உடலின் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

நீரழிவு மற்றும் எடை இழப்பு:

நெல்லிக்காய் நீரழிவு நோயாளிக்கு  நன்மை பயக்கும்.ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுபடுத்த உதவுகிறது. நெல்லிக்காய் எடை இழப்பிற்கு உதவுகிறது.நம் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி பசியை கட்டுபடுத்த உதவுகிறது. 

உடலுக்கு சக்தி:

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *