இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டு ஒவ்வொரு குடிமக்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஒன்றாகும்.அதில் ஒவ்வொரு குடிமக்களுடைய விவரங்களும் அடங்கிருக்கும்.எனவே ஆதார் அட்டை ரொம்ப முக்கியமான ஆவணமாகும்.
ஆதார் கார்டுல இருக்குற தகவல் ரொம்ப சரியாக இருபத்தும் அவசியம்.நம்மளோட பெயர்,வயது,போன் நம்பர் ,வீட்டு முகவரி,பிறந்த தேதி போன்ற விவரங்கள் இதுல அடங்கிருக்கு.இதுக்கு முன்னாடிலாம் மேல இருக்குற தகவல ஏதாவது தவறு இருந்தா தாலுகாக்கு அல்லது தபால் அலுவலகம் சென்று அத திருத்தம் செய்வோம்.ஆனால் இனி எங்கேயும் போய் அலைய வேண்டாம்.அதாவது நம்மளோட போன் மூலமாகவே ஆதார் ல உள்ள முகவரி,அப்பா பெயர்,கணவர் பெயர் ஆகியவற்றை நாமலே சரி செய்து கொள்ளலாம்.அது எப்படின்னு இப்பதிவில் பார்க்கலாம்.
ஆதார் விவரங்களை திருத்துவது எப்படி?
நீங்கள் உங்களோட ஆதார் அட்டையுடன் மொபைல் நம்பர் அ இணைத்திருந்தால் மட்டுமே ஆன்லைன் ல விவரங்களை மாற்ற முடியும்.ஏனென்றால் ஆதார் அட்டையுடன் இணைத்த போன் நம்பர்க்கு OTP வரும்.
முகவரி திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள்:
- பாஸ்போர்ட்
- ரேஷன் கார்டு
- பேங்க் பாஸ்புக்
- கேஸ் பில்
- வாக்காளர் அடையாள அட்டை
- டிரைவிங் லைசென்ஸ் அல்லது கிராம அலுவலர் அவர்களிடம் பெறப்பட்ட கடிதம்
உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் இருந்தால் போதும்.
- முதலில் ADDRESS CHANGE என்ற இணைய தளத்திற்க்கு சென்று உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- அடுத்ததாக கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கேப்ட்சாவை கொடுத்து Submit செய்தால் போன் நம்பர் க்கு OTP வரும்.
- OTP கொடுத்த பிறகு முகவரி மாற்றம் என்பதை க்ளிக் செய்து அதில் புதிய முகவரியை உள்ளிட்டு மேற்கண்ட ஆவணங்களின் ஆதாரத்தை ஸ்கேன் செய்து சமர்பிக்க வேண்டும்.
- அடுத்து பணம் செலுத்தும் வசதியை க்ளிக் செய்து ரூ50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- கடைசி புதிய ஆதார் கார்டு உங்களுடைய முகவரிக்கு அனுப்பப்படும்.
அப்பா பெயர்/கணவர் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் :
- பாஸ்போர்ட்
- ரேஷன் கார்டு
- பேங்க் பாஸ்புக்
- கேஸ் பில்
- வாக்காளர் அடையாள அட்டை
- டிரைவிங் லைசென்ஸ் அல்லது கிராம அலுவலர் அவர்களிடம் பெறப்பட்ட கடிதம்
உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் இருந்தால் போதும்.
- முதலில் NAME CHANGE என்ற இணைய தளத்திற்க்கு சென்று உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- அடுத்ததாக கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் கேப்ட்சாவை கொடுத்து Submit செய்தால் போன் நம்பர் க்கு OTP வரும்.
- OTP கொடுத்த பிறகு முகவரி மாற்றம் என்பதை க்ளிக் செய்து அதில் தந்தை அல்லது கணவர் பெயர்,முகவரியை உள்ளிட்டு மேற்கண்ட ஆவணங்களின் ஆதாரத்தை ஸ்கேன் செய்து சமர்பிக்க வேண்டும்.
- அடுத்து பணம் செலுத்தும் வசதியை க்ளிக் செய்து ரூ50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- கடைசி புதிய ஆதார் கார்டு உங்களுடைய முகவரிக்கு அனுப்பப்படும்.
