மத்திய அரசானது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளை கடக்கும்பொழுது நாம் செலுத்த கூடிய பணத்தில் சில மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளன.வருகிற நவம்பர் 15,2025 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரவிருப்பதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.
அதாவது நவம்பர் 15,2025 முதல் ஃபாஸ்டாக்(FASTAG) இல்லாமல் சுங்கசாவடிகளுக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாக பணம் செலுத்த விரும்பினால் இதற்க்கு முன்னாடி கட்டிய பணத்தை விட தற்போது இரு மடங்காக கட்டணம் செலுத்த வேண்டும் என நம் இந்தியா அரசு அறிவித்துள்ளது.இதனால் சரியாக இன்னும் 1 மாதத்திற்குள் செல்லுபடியாகும் ஃபாஸ்டாக்(FASTAG) ஐ வாங்குவதற்கு 30நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுல ஒரு நன்மை என்னென்னா வாகன ஓட்டிகள் இணையத்தின் வாயிலாக அதாவது கூகிள் பே,போன் பே,பேடிஎம் போன்ற UPI ஆப் மூலமாக பணம் செலுத்தினால் 2 மடங்கிற்கு பதிலாக 1.25 மடங்கு மட்டுமே செலுத்தலாம் என்ற விலக்கு அறிவிக்கபட்டுள்ளது.இது மூலமா போக்குவரத்து ஓட்டத்த சீராக்கவும்,சுங்க சாவடிகளில் வசூல் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும்,மேலும் மக்கள் டிஜிட்டல் பண வர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக இந்த வழிமுறை அமலுக்கு வர உள்ளது.
எனவே பயனாளர்கள் நவம்பர் 15,2025 க்குள் ஃபாஸ்டாக்(FASTAG) ஐ எடுத்து வைத்து கொள்ள மத்திய அரசு கெடு கொடுத்துள்ளது.
