கண் கண்ணாடி வாங்குவதற்கு உதவி தொகை பெறலாம்!இது உங்களுக்கு தெரியுமா?உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் கண் கண்ணாடி உதவி தொகை பெறலாம்.அதாவது நலவாரிய அட்டை வைத்திருப்போர் கண் கண்ணாடி உதவி தொகை விண்ணபிப்பதன் மூலம் தமிழக அரசால் நலவாரியத்தின் கீழ் ரூ 500 வழங்க பட்டு வருகிறது.இந்த உதவி, நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் கண் கண்ணாடி தேவைக்காக மருத்துவர் பரிந்துரையுடன் விண்ணப்பித்தால் கிடைக்கும்.

உதவித்தொகை : ரூ500

விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை:

  • அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
  • தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
  • நீல நிற பேனாவை வைத்து மட்டுமே எழுத வேண்டும்.

எவ்வாறு விண்ணபிப்பது?

பதிவு பெற்ற உறுப்பினரின் பெயர் – நலவாரிய அட்டை உறுப்பினரின் பெயரை எழுத வேண்டும்.

தந்தை அல்லது கணவர் பெயர் – அட்டை வைத்திருப்போர் ஆணாக இருந்தால் அவர்களுடைய தந்தை பெயரை குறிப்பிட வேண்டும்.இதுவே பெண்ணாக இருந்தால் அவர்களுடைய கணவர் பெயரை குறிப்பிட வேண்டும்.

முழு முகவரி – உறுப்பினர் அட்டையில் இருக்கும் முகவரியை எழுத வேண்டும்.

பதிவு எண்/நாள் – உறுப்பினர் அட்டையில் உள்ள பதிவு எண் மற்றும் பதிவு செய்ய பட்ட நாளை குறிப்பிட வேண்டும்.

குடும்ப அட்டை எண் – நடப்பில் உள்ள Smart card இல் உள்ள 333 எனத் தொடங்கும் நம்பர் ஐ எழுத வேண்டும்.

ஆதார் எண் – நலவாரிய அட்டையின் உறுப்பினருடைய ஆதார் எண்ணை எழுத வேண்டும்.

தொழிலின் தன்மை – மேலே வாரியத்தின் பெயரில் குறிப்பிட்டுள்ள தொழிலுக்கு சார்ந்த தொழிலை எழுதவேண்டும்.உதாரணத்துக்கு (கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சு தொழில்…. என குறிப்பிட வேண்டும்.)

மருத்துவரின் பரிந்துரை சீட் நாள் – கண் மருத்துவர் எழுதி கொடுத்த பரிந்துரை சீட்டினுடைய தேதியை குறிப்பிடவும்.

கண் கண்ணாடி வாங்கிய நாள் – கண்ணாடி வாங்கிய நாள்.

பதிவு பெற்ற உறுப்பினரின் கையொப்பம் -.நலவாரிய அட்டையில் கையெழுத்து போடப்பட்டிருந்தால் உறுப்பினர் கையெழுத்து போட வேண்டும் இல்லை அட்டையில் கை ரேகை வைக்க பட்டிருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.

தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் முத்திரை(Seal) – அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று கண்டிப்பாக பெற்று கொள்ளவும்.

தொடர்புக்கு :

மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *