தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அதில் கல்வி உதவி தொகை,திருமண உதவிதொகை,மகப்பேறு உதவி தொகை,இயற்கை/விபத்து மரண உதவி தொகை என பல திட்டகளை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு நலவாரியம்.இப்பதிவில் \மகப்பேறு உதவி தொகையினை பற்றி தெளிவாக காண்போம்.
மகப்பேறு உதவித்தொகையில் இரண்டு வகையிலான நலத்திட்ட உதவிகள் உள்ளன.அதாவது கரு உருவாகி குழந்தை பிறந்தாலும் உதவித்தொகை பெறலாம்.கருகலைப்பு அல்லது கருச்சிதைவு ஏற்பட்டாலும் உதவித்தொகை பெறலாம்.
நலவாரிய மையம் வாரியத்தின் கீழ் அரசு வழங்கும் திருமண உதவித்தொகை நலத்திட்ட உதவிகள்:
- கட்டுமான /ஓட்டுனர் தொழிலாளர் நலவாரியம்
- மகப்பேறு உதவித்தொகை : ரூ.18,000
- கருகலைப்பு / கருச்சிதைவு : ரூ.3000
- இதர தொழிலாளர் நலவாரியம்
- மகப்பேறு உதவித்தொகை : RS.6000
- கருகலைப்பு / கருச்சிதைவு : ரூ.3000
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- நலவாரிய அட்டை
- நலத்திட்ட உறுதிமொழி சான்று
- பேங்க் புக்
- போட்டோ/கையெழுத்து
- அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்து கர்ப்பத்திற்கான சான்றிதழ் (முதல் தவணை)
- குழந்தையின் பிறப்பு சான்றிதழ் (இரண்டாவது தவணை)
- கருச்சிதைவிற்கான சான்றிதழ் (கருச்சிதைவுக்கு விண்ணப்பத்திற்கு மட்டும்)
- கருக்கலைப்பிற்கான சான்றிதழ் (கருக்கலைப்பு விண்ணப்பத்திற்கு மட்டும்)
எவ்வாறு விண்ணபிப்பது?
- கீழே உள்ள Pregnancy Claim என்ற லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள Apply Here என்ற லிங்க் ஐ கிளிக் செய்து லாகின் செய்து கொள்ளவும்.
- அடுத்து உங்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்.
- அடுத்த பக்கத்தில் Cliam என்ற Option ஐ க்ளிக் செய்து அதில் Maternity/Miscarriage/Termination of Pregnancy என்பதை க்ளிக் செய்யவும்.
- இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் கேட்க கூடிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் வரும்.அந்த நம்பர் மற்றும் உங்களுடைய மொபைல் எண்ணை வைத்து விண்ணப்பத்தின் நிலையை செக் செய்து கொள்ளளலாம்.
விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை:
- அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
- தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
- நீல நிற பேனாவை வைத்து மட்டுமே எழுத வேண்டும்.
தொடர்புக்கு :
மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
