பொங்கல் பரிசு, நிவாரணம் யார் யாருக்கு கிடைக்கும்? தெரியுமா?

தமிழ்நாட்டில் எந்த வகையான ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும் கார்டு எதுன்னு தெரியுமா? அந்த ரேஷன் கார்டுக்கு எப்படி மாற்றுவது என்பதை பற்றி கீழே காண்போம். தமிழ்நாட்டில் 2.20 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கல் ரொக்கப் பரிசாக பேரிடர் நிவாரணம் உள்ளிட்டவற்றை அறிவிக்கும் பொழுது ரேஷன் அட்டை வைத்திருப்போர் அடிப்படையிலேயே அவை வழங்கப்படும்.

அரசு அறிவிக்கும் இந்த திட்டம் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் கிடைக்கும் என்றால் இல்லை. சில குறிப்பிட்ட அட்டைகளுக்கு மட்டுமே இந்தப் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. அதற்கு காரணம் என்னவென்று தெரியுமா தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் PHH அட்டை அரிசி உட்பட அனைத்து அனைத்து பொருட்களும் இந்த கார்டு உள்ளவர்களுக்கு கிடைக்கும். சலுகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் NPHH அட்டை அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் இல்லாமல் சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் கிடைக்கும். அதே போன்று NPHH அட்டை வறுமைக் கோட்டிற்க்கு கீழ் உள்ள முதியோருக்கு அதிக அளவில் அரிசி கிடைக்கும் AAY அட்டை, வெறும் முகவரி அடையாளத்திற்கு மட்டும் பயன்படும் NPHH-NC அட்டை ஆகியவைதான் இந்த ஐந்து வகையான கார்டுகளின் விளக்கமாகும்.

நீங்கள் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அரிசி அட்டையான PHH அல்லது NPHH அட்டை வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் அதனை மாற்ற முடியுமா என்று கேட்டால் அதனை கண்டிப்பாக மாற்ற முடியும். அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை அட்டைக்கு மாற விரும்பினால் எளிதாக பெற்றுவிடலாம். நீங்கள் TNPDS இணையதளம் tnpds.gov.in அல்லது அதன் மொபைல் மூலம் எளிதாக விண்ணப்பித்து விடலாம்.

ஆனால், சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாறுவது கொஞ்சம் சிக்கல்தான். ஆனால் அரசு கேட்கும் ஆவணங்களை முறையாக சமர்பித்தால் எளிதாக மாற்றிவிடலாம். நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதையும் அரசு சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்பதையும் அதிகாரிகளுக்கு நிருபிக்க வேண்டும். ஏழ்மையில் இருப்பவர்கள் பொருளாதார சூழல் மாறியதால் தகுதியானவர்கள் முறையாக விண்ணப்பித்தால் அட்டை வகையை மாற்றி கொள்ள முடியும். இதற்க்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை மனு கொடுக்க வேண்டும்.

இத்துடன் ஆதார் அட்டை, புகைப்படம், வறுமைக் கோட்டு பாட்டியலில் உள்ளவர்கள் என்பதற்க்கான ஆதாரம் வி. ஏ. ஓ. விடம் உங்கள் பொருளாதார நிலை குறித்த அறிவிக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும். நீங்கள் வாங்கும் உணவு பொருட்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். உங்களின் சொத்து மதிப்பு, வருமானம், வரிவிளம்பரங்கள் நீங்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தையும் அறிந்துக் கொண்டு அதில் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தால் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற முடியாது.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *