நம் குடலில் கொக்கி புழுக்கள் அதிகம் இருந்தால் இரத்த சோகையை உண்டாக்கும். இந்த புழுக்கள் அதிகம் இருக்கும் போது ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாகும். இரத்தசோகை என்பது நம் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படக்கூடிய ஒரு நோய். இதன் அறிகுறி சுறுசுறுப்பாக இல்லாமல் எப்போதும் சோர்வாக இருப்பார்கள். எப்போதும் தூங்கிட்டு இருப்பார்கள். தலைவலி , தலைசுற்றும் வரக்கூடும் . ஒரு சிலர் உடல் மெலிந்து காணப்படுவர். உடம்பில் இரத்த ஓட்டம் குறைவதால் தோல்கள் வெளிறிய நிறத்தில் காணப்படும். சுவாசிப்பதற்கு கூட சிரமபடுவார்கள். இரத்தசோகை அதிகமாகும்போது சுயநினைவை இழக்க நேரிடலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் சீக்கிரமாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இதிலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
- அதிகமான ஊட்டசத்து நிறைந்துள்ள உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் .
- ஹீமோகுளோபின் அதிகமுள்ள பேரீச்சைபழம், கீரைகள் ,பழங்கள் ,உலர்ந்த திராட்சை, பச்சை காய்கறிகள் ,முட்டை ,இறைச்சி ,ஆட்டின் ஈரல், மீன், சுவரொட்டி ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
- தினமும் காலை மற்றும் இரவில் பசும்பால் குடிக்கவேண்டும். டீ,காபி குடிப்பதை தவிர்க்கவேண்டும் .
- முருங்கை கீரையில் அதிகமான ஹீமோகுளோபின் இருப்பதால் நாம் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை கீரை பொரியல் செய்து சாப்பிடலாம். சூப்பாகவும் செய்து வாரத்தில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- தினமும் இரவில் உலர் கருப்பு திராட்சையை ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை அப்படியே குடிக்க வேண்டும். அந்த திராட்சையை அப்படியே சாப்பிட வேண்டும். இதனால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- சுத்தமான தேனில் பேரீச்சைபழத்தை ஊற வைத்து சாப்பிட இரத்தம் அதிகரிக்கும்.
- அத்திபழம், மாதுளை ஆகிய பழங்களில் ஹீமோகுளோபின் அதிகம் உள்ளது.இதை தினமும் சாப்பிட வேண்டும்.
- தினமும் காலையில் பீட்ருட், அதனுடன் சிறிது தேங்காயை சேர்த்து அரைத்து அதை சாறு எடுத்து குடிக்க வேண்டும். இப்படி வாரத்தில் மூன்று முறை செய்து குடிக்க வேண்டும். இதே போல் நாம் கடைபிடித்து வந்தால் இரத்த சோகை வராமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளாம்.
