இந்த ரேஷன் அட்டை வைத்து இருந்தால்! 5 கிலோ இலவச அரிசி! இது தெரியுமா?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பற்றி இப்பதிவில் காண்போம். தினக்கூலியை நம்பி வாழும் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவு இல்லாமல் பசியும் பட்டினியும் மிக அதிகமாக இருந்தது. அதனால்தான் இந்திய அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. அந்த திட்டத்தின் பெயர்தான் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமாகும்.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்

கோவிட்-19 பரவலை கட்டுபடுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.. இதனால் தினசரி வேலை செய்வோரின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால் உணவு தட்டுப்பாடும் அதிகமாகிவிட்டது. இந்த பிரச்னையை போக்குவதற்கு இந்திய அரசு 26 மார்ச் 2020 அன்று அறிமுகபடுத்திய திட்டம்தான் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் வழக்கமாக உணவுப் பொருட்களுடன் 5 கிலோ அரிசி, கோதுமை, இலவசமாக வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்த்தின் நன்மைகள் :

வறுமை கோட்டிற்கு கிழே உள்ள குடும்பகளுக்கு AAY ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பகளுக்கு PHH ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே மானிய விலையில் ரேஷன் பொருட்களை பெற்று வரும் இந்த PHH மற்றும் AAY ரேஷன் அட்டைதாரருக்கு பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி கோதுமை வழங்கப்படுகிறது. அதேபோல் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை என்ற திட்டத்தின் அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள்இந்தியா முழுவதும் எந்த மாநிலத்தில் இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் சலுகை பெறலாம்.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்த்தின் விவரங்கள்:

2020 ல் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் இந்த திட்டம் 3 மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. ஏழை மக்களின் நலனையும் பசியையும் கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏப்ரல் 2020 ல் தொடங்கிய இந்த திட்டம் இபொழுது 1 ஜனவரி 2024 முதல் 31 டிசம்பர் 2028 வரை இந்த திட்டம் நீட்டிகப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்த்தின் கீழ் உணவு பொருட்களை பெறுவது எப்படி :

இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி கோதுமை பெற தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களிடம் ரேஷன் அட்டை அதாவது (AAY அல்லது PHH ரேஷன் அட்டை) இருந்தால் மட்டும் போதுமானது.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *