இனி! 11-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் அனைவருக்கும்! ரூ.3000 கல்வி உதவித் தொகை! உடனே! விண்ணப்பம் செய்ங்க!

தமிழ்நாடு நலவாரியத்தின் மூலம் வழங்கபடும் ரூ3000 வரை கல்வி உதவித்தொகை 11ஆம் வகுப்பு பயிலும் உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.அந்த விண்ணப்ப படிவத்தை எப்படி நிரப்புவது என இப்பதிவில் காணலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

  • நலவாரிய அட்டை தொழிலாளர்கள்
  • அந்த தொழிலாளர்களின் 11ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு மட்டும்.

தேவையான ஆவணங்கள்:

  • உறுப்பினரின் ஆதார் கார்டு
  • பேங்க் புக்
  • நலவாரிய அட்டை
  • குழந்தையின் ஆதார் கார்டு
  • குழந்தையின் நடப்பு கல்வி சான்றிதழ்

நலவாரிய மைய வாரியத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பயிலும் பெண் பிள்ளைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் :

  • கட்டுமான தொழிலாளர் வாரியம்-ரூ3000
  • கார்,ஆட்டோ டிரைவர் வாரியம் -ரூ1500
  • இதர வாரியம்-ரூ 1500

எவ்வாறு விண்ணப்பிப்பது?

11ஆம் வகுப்பு கல்வி உதவி தொகையினை விண்ணப்பிபதற்கான விண்ணப்ப படிவம் கீழே உள்ள 11th Girls Cliam Form என்ற லிங்க் இல் உள்ளது.

விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின் பெயர் – 11ஆம் வகுப்பு பயில என எழுதவும்.

உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர் – உறுப்பினர் அட்டையில் எந்த வாரியத்தின் பெயர் இருக்கோ,அந்த வாரியத்தின் பெயரை எழுத வேண்டும்.

உறுப்பினரின் பெயர் – நலவாரிய அட்டை உறுப்பினரின் பெயரை எழுத வேண்டும்.

தந்தை அல்லது கணவர் பெயர் – அட்டை வைத்திருப்போர் ஆணாக இருந்தால் அவர்களுடைய தந்தை பெயரை குறிப்பிட வேண்டும்.இதுவே பெண்ணாக இருந்தால் அவர்களுடைய கணவர் பெயரை குறிப்பிட வேண்டும்.

முழு முகவரி – உறுப்பினர் அட்டையில் இருக்கும் முகவரியை எழுத வேண்டும்.

பதிவு எண்/நாள் – உறுப்பினர் அட்டையில் உள்ள பதிவு எண் மற்றும் பதிவு செய்ய பட்ட நாளை குறிப்பிட வேண்டும்.

குடும்ப அட்டை எண் – நடப்பில் உள்ள Smart card இல் உள்ள 333 எனத் தொடங்கும் நம்பர் ஐ எழுத வேண்டும்.

ஆதார் எண் – நலவாரிய அட்டையின் உறுப்பினருடைய ஆதார் எண்ணை எழுத வேண்டும்.

தொழிலின் தன்மை – மேலே வாரியத்தின் பெயரில் குறிப்பிட்டுள்ள தொழிலுக்கு சார்ந்த தொழிலை எழுதவேண்டும்.உதாரணத்துக்கு (கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சு தொழில்…. என குறிப்பிட வேண்டும்.)

கல்வி உதவி தொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் – பெண் குழந்தைக்காக விண்ணப்பிப்பதால் மகன் ஐ அடித்து விட்டு பெண் பிள்ளையின் பெயரை எழுதவும்.

தேர்ச்சி பெற்ற /பயிலும் வகுப்பு /பயிலும் வருடம் – பயிலும் வகுப்பை டிக் செய்துவிட்டு விண்ணப்பத்தில் 11ஆம் வகுப்பு என குறிப்பிட வேண்டும்.அடுத்து பயிலும் வருடத்திற்கு கீழ் நடப்பு கல்வி ஆண்டை குறிப்பிட வேண்டும்.

பதிவு பெற்ற உறுப்பினரின் கையொப்பம் -.நலவாரிய அட்டையில் கையெழுத்து போடப்பட்டிருந்தால் உறுப்பினர் கையெழுத்து போட வேண்டும் இல்லை அட்டையில் கை ரேகை வைக்க பட்டிருந்தால் கைரேகை வைக்க வேண்டும்.

இடம் மற்றும் நாள் – விண்ணப்பம் பதிவு செய்யப்படும் இடம் மற்றும் அன்றைய தேதியை குறிப்பிட வேண்டும்.

தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் முத்திரை(Seal) ஐ அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று கண்டிப்பாக பெற்று கொள்ளவும்.

விண்ணப்பத்தை நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை:

  • அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.
  • தமிழில் மட்டுமே எழுத வேண்டும்.ஆங்கிலத்தில் எழுத கூடாது.
  • நீல நிற பேனாவை வைத்து மட்டுமே எழுத வேண்டும்.

11th Girls Claim Form

தொடர்புக்கு :

மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *