நாம் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்க செய்ய முடியலனு கவலை படுபவர்கள் அதிகம் உள்ளன. இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஒரு சிலருக்கு உடல் சூட்டினால் உடல் எடை குறைந்து இருக்கும். அவங்க தினமும் இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். எள் உருண்டை, எள்பொடி உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டுவந்தால் உடல் எடை அதிகரிக்கும். இரவில் உலர்ந்த திராட்சையை பத்து எடுத்து ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை குடித்து அந்த பழத்தை அப்படியே சாப்பிட வேண்டும்.
அதிக செலவு இல்லாமல் நாம் அன்றாட வீட்டில் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருளை வைத்து நாம் உடல் எடையை கூட்டலாம். உடல் எடை அதிகரிக்க இன்னொரு பொருள் என்றால் கருப்பு உளுந்து தான். வெள்ளை உளுந்துடன்,கருப்பு உளுந்துக்கு தான் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஒரு கைபிடி கருப்பு உளுந்தை எடுத்து லேசாக பொன் நிறமாக வறுக்க வேண்டும். அதனுடன் இரண்டு ஏலக்காய் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். அரைத்த உளுந்தை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். பிறகு இதை அடுப்பில் வைத்து அடி சேராமல் கிண்ட வேண்டும். அதனுடன் வெள்ளம் அல்லது நாட்டுச் சக்கரையை சேர்க்க வேண்டும். பிறகு பசும்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும். ஆறு மாதம் இப்படி தினமும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
தினமும் வேகவைத்த உருளைகிழங்கு சாப்பிடவேண்டும்.பேரீச்சைபழம்,கீரைகள் பழங்கள்,காய்கறிகள்,முட்டை,மீன்,ஆடு ஈரல்,தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். பாதம் பருப்பு ,முந்தரி,உலர்ந்த திராட்சை,பசும்பால் சேர்க்க வேண்டும். தினமும் வாழைப்பழம் சேர்க்கவேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வர நம் உடல் எடை அதிகரிக்ககூடும்.

Very nice Tips…
Thank you