தொழில் முனைவோர்களை உருவாக்கவும் அதே நேரத்தில் பால் உற்பத்தியை அதிகபடுத்தவும் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டம் பால்பண்ணை தொழில் முனைவோர் திட்டமாகும். இந்தியாவில் கால்நடை வளரப்பு என்பது லாபகரமான தொழிலாக இருந்து வருகிறது. கிராம பகுதிகளில்தான் கால்நடை அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இளைஞங்கர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நாட்டின் சுய வேலையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் :
பால் பண்ணை வைத்திருக்கும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் 2010 ஆம் ஆண்டின் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மீன்வளத்துறையால் தொடங்கப்பட்ட திட்டமே பால் பால் பண்ணை தொழில்முனைவோர் திட்டமாகும்.இந்த திட்டத்தில் பால் பண்ணை தொடங்க நினைக்கும் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படுகிறது.
பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் நோக்கம் :
பால் பண்ணை மற்றும் தொடர்புடைய குழுக்களில் கடன் உதவி வழங்கப்படுகிறது. பால் பண்ணை துறையில் சுய தொழிலை உருவாக்குவதிலும் அதை வலுபடுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தரமான பால் பொருட்களை வழங்க பால் உற்பத்தி மற்றும் பால் பொருட்களின் பதப்படுத்துதலை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பால் பண்ணை தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் நன்மைகள்:
இந்த திட்டத்தின் கீழ் பால் பண்ணை நிறுவுதல் கன்று வளர்ப்பு மண்புழு உரம் பால் கறக்கும் இயந்திரங்கள் வாங்குதல் போக்குவரத்து தனியார் கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது. பால் பண்ணை அமைப்பதற்கு ஆகும் செலவு 1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் மொத்ததொகையில் 10 சதவீதத்தை விண்ணப்பதாரர் பங்களிக்க வேண்டும். அதேபோல் பொது பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்கள் மொத்த செலவில் 25% மானியம் வழங்கப்படும். SC ST பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பதாரருக்கு மொத்த செலவில் 33.33% மானியம் வழங்கப்படுகிறது. மீதி உள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படுகிறது.
என்னென்ன மானியம் வழங்கபடுகிறது ?
மொத்த செலவில் 25% மானியம் வழங்கப்படுகிறது SC ST பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பதாரருக்கு மொத்த செலவில் 33.33% மானியம் வழங்கப்படுகிறது. பொதுவாக 10 மாடுகளுடன் பால் பண்ணை அமைக்க ரூ. 7 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஒரு மாட்டுக்கு ரூ. 17,500 வீதம் SC/ST பிரிவினருக்கு 23,300 வரை மானியம் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம் திருப்பி செலுத்தும் காலம் :
பொதுவாக கடன் வங்கி 3 முதல் 7 ஆண்டுகள் வரை கடன் செலுத்துவது மற்றும் பால் பண்ணை கடனுக்கு 3-6 மாத சலுகை காலம் கொடுக்கப்படுகிறது. கன்று வளர்ப்பு கடனுக்கு 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் கொடுக்கப்படுகிறது.
யார் யார் விண்ணப்பிக்கலாம் ?
தனி நபராக உள்ளவர்கள் பால் கூட்டுறவு சங்கம் வைத்திருப்பவர்கள் பெண் சுயஉதவி குழுக்களில் உள்ளவர்கள் உற்பத்தியாளர் மற்றும் நிறுவனங்கள் அரசு அரசு சார நிறுவனங்கள் SC/ST சமூகத்தினர் பெண்கள் சிறு விவசாயிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்கள் இந்த பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் கார்டு
- வாக்களர் அடையாள அட்டை
- பான் கார்டு
- சாதிச்சான்றிதழ்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- நில ஆவணங்கள்
- வருமானச்சான்று
- வங்கி கணக்கு விவரம்
பால் பண்ணை கடன் திட்டத்திற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் :
தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிராந்திய கிராம வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் மாநில வேளாண்மை மேம்பாட்டு வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் நடை முறை:
விண்ணப்பிப்பவர்கள் முதலில் தங்களுடைய Project Report தயாரிக்க வேண்டும் செலவு கடன் தேவை வருமான மதிப்பீடு போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். தங்களுக்கு அருகில் உள்ள கிளைகளில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். வங்கி ஆய்வு செய்து கடனை ஒப்புதல் அளிக்க வேண்டும். கடன் தொகை இரண்டு தவணையாக வழங்கப்படும்.
