தமிழக அரசின் கறவை மாடு திட்டம்

தமிழக அரசின் கறவை மாடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இதில் 1 லட்சம் முதல் 20 ஆயிரத்துக்கு மேல் கடன் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார மேம்பாட்டை அதிகப்படுத்த கறவை மாடு வாங்குவதர்க்கான திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் அதிக பட்சமாக ஒரு பயனாளிக்கு இரண்டு கறவை மாடுகள் வாங்க ரூ. 1,20,000 கறவை மாடு ஒன்றுக்கு ரூ. 60,000 வழங்கப்படுகிறது.

கறவைமாடு வாங்குவதரற்க்கான கடன் திட்டம் :

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின் / மாவட்ட கூட்டுறவு) பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுபினர்களை தேர்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு அதிக பட்சம் ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடு வாங்க ரூ. 1,20,000 கறவை மாடு ஒன்றுக்கு ரூ. 60,000 வழங்கப்படுகிறது.

இதற்க்கான தகுதிகள் :

பிற்படுத்தபட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ சீர் மரபினர் ஆண்டுவருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 60 வயது இருக்க வேண்டும்.

மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் :

  • சாதிச்சான்றிதழ்
  • வருமானச்சான்றிதழ்
  • பிறப்பிடச்சான்றிதழ்
  • அடமானத்திற்குறிய ஆவணங்கள்

விண்ணப்பிக்கும் முறை :

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ( ஆவின் ) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *