இனி! தமிழ்நாடு நலவாரிய அட்டையை வாங்குவது ரொம்ப ஈசி! தெரியுமா?

நலவாரிய அட்டை இல்லாதவர்கள் எப்படி புதிய அட்டையை விண்ணப்பிக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

  1. ஆதார்
  2. ஸ்மார்ட் கார்டு
  3. பேங்க் புக்
  4. கையெழுத்து

விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :

  • முதலில் நீங்கள் இந்த 👉 https://tnuwwb.tn.gov.in/ லிங்க் ஐ க்ளிக் செய்து ஓபன் செய்யவும்.
  • அதில் புதிய விண்ணப்ப பதிவு என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • அடுத்ததாக உங்களுடைய மொபைல் நம்பர் ஐ உள்ளிட்டு லாகின் பண்ணவும்.பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் க்கு OTP வரும்.OTP ஐ உள்ளிட்டு Submit செய்யவும்.
  • அதன்பிறகு ஆதார் நம்பர் ஐ கொடுத்து Verify செய்ய வேண்டும்.
  • அடுத்த பேஜ் இல் உங்களுக்கு எந்த நலவாரியம் வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து,அதில் எந்த தொழில் என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு உங்களுடைய அப்பா பெயர்,நீங்கள் பிறந்த தேதி ஐ கொடுக்கவும்.அதற்க்கான சான்று Smart card ஐ அப்லோட் செய்து,Next கொடுக்கவும்.
  • அடுத்த பக்கத்தில் உங்களுடைய Community ஐ தேர்ந்தெடுக்கவும்.குடும்ப அட்டை எண்ணை கொடுக்கவும்.பின் குடும்ப அட்டையை அப்லோட் செய்து Next கொடுக்கவும்.
  • அடுத்த பக்கத்தில் உங்களுடைய முகவரியை கொடுக்க வேண்டும்.பிறகு நீங்கள் எந்த வேலை,எவ்வளவு வருடம் அந்த வேலை பார்க்குறீர்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • அடுத்து உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை நிரப்பி,அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் உங்களது குடும்ப விவரங்கள் அதாவது,உறுப்பினர்கள்,வயது,உறவு முறை எல்லாவற்றையும் கொடுத்து,வாரிசுதாரர் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.
  • அடுத்து உங்களுடைய போட்டோ,கையெழுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இறுதியாக மாவட்ட தலைவரிடம் பணிசான்று வாங்கி,அதையெல்லாம் நிரப்பி பணிசான்றை அப்லோட் செய்ய வேண்டும்.
  • எல்லாம் விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து விட்டு Submit பண்ணவும்.
  • உங்களுடைய விண்ணப்பத்தின் நிலை அறிய உங்களுடைய மொபைல் நம்பர் க்கு ஒரு விண்ணப்ப எண் வரும்.அந்த நம்பர் ஐ வைத்து ஸ்டேட்ஸ் செக் பண்ணிக்கலாம்.
  • உங்களுடைய நலவாரிய அட்டை ஐ 5 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்தால் மட்டுமே உதவித்தொகைக்கு விண்ணபிக்க முடியம்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *