தமிழக அரசு வழங்கும் நலவாரிய அட்டை அதாவது தமிழ்நாடு தொழிளாலர் நலவாரியத்தின் கீழ் கொடுக்கும் அடையாள அட்டை உங்களிடம் உள்ளதா? இல்லையென்றால் உடனே விண்ணப்பித்து வாங்கி கொள்ளவும். இந்த நலவாரிய அட்டையினால் என்னென்ன நன்மை இருக்குனு முதல தெரிஞ்சிகோங்க!
முதலில் நலவாரியம் என்பது சில குறிப்பிட தொழில் புரியம் தொழிலாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளாகும்.அதாவது தொழிலாளர்களின் குழந்தைகளின் படிப்புக்காக கல்வி உதவி தொகை,உயர் கல்வி உதவி தொகை, திருமண உதவி தொகை,மருத்துவ உதவி தொகை,தொழிலாளர்களின் விபத்தில் ஊனமானலோ அல்லது மரணமடைந்தாலோ நிவராணதொகை,மகப்பேறு உதவித்தொகை,60 வயதுக்கு மேல் ஓய்வூதிய தொகை என பல உதவி தொகைகள் இதுல அடங்கிருக்கு.இந்த உதவி தொகையானது குறிப்பிட்ட சில தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.அதாவது கட்டுமானத்தில் பணிபுரிபவர்கள்,ஓட்டுனர்கள்,அமைப்பு சாரா தொழிளாலர்கள் (வீட்டு அடிப்படையிலான தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள்) இந்த நலவாரிய உறுப்பினர் அட்டையை வாங்கி உதவி தொகையை பெறலாம்.
நலவாரிய மையத்தின் முக்கிய நோக்கம் :
- கல்வி,திருமணம்,மகப்பேறு,கண் கண்ணாடி,உடல் ஊனம்,இயற்கை மரணம் என உதவித்தொகையை வழங்குவது.
- ஓய்வூதியம்,பணியிடத்து விபத்து மரணத்திற்கு நிவாரணம் வழங்குதல்.
- தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை நிலை நிறுத்துதல்.
உதவி தொகையை எப்படி பெறலாம் ?
- நலவாரியத்தில் முதலில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பின் உறுப்பினர் அட்டையை வாங்க வேண்டும்.
- உறுப்பினர் அட்டையை வைத்து அருகிலுள்ள நலவாரிய சேவை மையத்திற்கு சென்று உதவி தொகைக்கு விண்ணபிக்கலாம்.
தொடர்புக்கு :
மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.
