கிராம்பு
கிராம்பை நடுவில் கீரி கோதுமை மாவில் போடவேண்டும்.பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி கிராம்புக்கு
உள்ளது. அதனால் வண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்காது. புழுக்களும் வராது.
உப்பு
மாவில் கொஞ்சம் தூள் உப்பு கலந்து வைக்கலாம் .கல் உப்பை ஒரு சின்ன துணியில் கட்டி அந்த மாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் வராது. இப்படி செய்து பாருங்கள் சப்பாத்திக்கு மாவு எடுக்கும்போது உப்பை பார்த்து சேர்த்துக் கொள்ளவும்
பட்டை
ஆறு மாத்திற்க்கு கோதுமை மாவில் வண்டு,புழு வராமல் இருக்க ஐந்து, ஆறு பட்டைதுண்டுகள் மாவில் போட்டு இறுக்கமாக காற்று புகாதவாறு வைக்க வேண்டும் இந்த பட்டை வாசனைக்கு புழுக்கள் வராது.
மிளகு
நாம் கோதுமைமாவு அரைத்து வந்தவுடன் சல்லடையில் நன்றாக சலித்து வைக்கவேண்டும். சலித்த மாவுடன் அதில் சிறிதளவு மிளகு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். சப்பாத்திக்கு மாவு எடுக்கும்போது மிளகுகை சேர்த்து பிசைந்தால் நன்றாக இருக்கும். மிளகு வேண்டம் என்றால் எடுத்து விடலாம் .
வெயில்
நாம் கோதுமைமாவு அரைத்து வந்தவுடன் அப்படியே மூடி வைத்தால் மாவு கட்டி சேர்ந்து விடும். வண்டு ,புழு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.இதனால் அதிக மாவு வேஸ்டு ஆகும்.இதனை தடுப்பதற்கு வாரத்தில் ஒரு முறை மாவை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும் .குறைந்தது நான்குமணி நேரமாவது வெயிலில் வைக்கவேண்டும்.
வத்தல்
கோதுமை மாவில் இரண்டு வத்தல்களை போட்டு வைக்க வேண்டும்.வத்தலை நேரடியாகவும் போடலாம் அல்லது சின்ன காட்டன் துணியில் வத்தலை இறுக கட்டி வைத்து போடலாம்.வத்தல் வாசனைக்கும் எந்த ஒரு வண்டும் பூச்சியும் வராது.
வசம்பு
5 ரூபாய்க்கு சின்ன வசம்பை வாங்கி அதை கோதுமை மாவில் போட்டால் போதும் வசம்பு வாடைக்கும் புழு பூச்சிகளும் வராது.அதையும் நேரடியாகவும் போடலாம் அல்லது சின்ன துணியில் இறுக்கமாக கட்டியும் போடலாம்.
