தமிழ்நாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் ரூ. 2000 உதவி தொகை வழங்கும் அன்பு கரங்கள் திட்டம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்
சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் சிக்கி தவிக்கும் குடும்பங்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஏற்கனவே “தாயுமானவர்” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றோரல் பராமரிக்க முடியாத குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் பாதுகாத்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் அன்பு கரங்கள் திட்டமாகும். இதற்க்கு யார் விண்ணபிக்கலாம் உதவி தொகை எவ்வளவு என்பதை கிழே காண்போம்
அன்பு கரங்கள் திட்டம் என்றால் என்ன?
அரசு பள்ளிகளில் இலவச கல்வி கிடைத்தாலும் மற்ற கல்வி தொடர்பான செலவுகளை சமாளிக்க பெற்றோர் இல்லாத குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாக்கும் வகையில் அன்பு கரங்கள் திட்டத்தை அறிவித்தது
இத்திட்டம் செப்டம்பர் 15 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அன்பு கரங்கள் திட்டத்தின் நோக்கம் :
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து அவர்களுக்கு வளமான வாழ்க்கையும் இடைநிற்றல் இல்லாத கல்வியும் வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அன்பு கரங்கள் திட்டத்தின் முக்கிய நோக்கம்:
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளின் எதிர்காலத்தை குறித்து மாதந்தோறும் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் பள்ளி படிப்பு முடித்தவுடன் உயர்கல்வி பெறுவதற்கும் இந்த திட்டம் உதவியாக உள்ளது. உதவித்தொகை பெறுவதில் எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் வங்கி கணக்கிற்கே உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அன்பு கரங்கள் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம் :
- ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர்இருவரையும் இழந்த குழந்தைகள் )
- கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள்)
- ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் மாற்று திறனாளியாக இருத்தல்)
- ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயாள் பாதிக்கப்பட்டு இருந்தால்)
- ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் சிறையில் இருந்தால்)
- இதில் தமிழ்நாட்டை சேர்ந்த அரசுப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு மற்றும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்
அன்பு கரங்கள் திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்:
- குழந்தை வங்கி கணக்கு Passbook Xerox
- குழந்தை ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- குழந்தையின் Passport Size Photo
- குழந்தையின் பிறப்புச் சான்றிதல்/மதிப்பெண் சான்றிதழ்
