Skin அழகா இருக்க டிப்ஸ்

உங்கள் சருமம் அழகாக இருக்க வேண்டுமா? அதற்கு நம் தென்னிந்திய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். சரும பாதிப்பை தடுக்கும் முக்கியமான சத்துகள் என்னென்ன அவை எந்த உணவுகளில் அதிகம் உள்ளது அதை நாம் உள்ளுக்குள் எப்படி எடுத்து கொள்வது என்பதை பற்றி காண்போம்.

சருமத்தை நாம் அழகுப்படுத்தவும் சரும பிரச்சனைகளை குறைக்கவும் விரும்பினால் சரியான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சருமத்தை பாதுகாக்க நம் பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.

சருமம் புத்துணர்ச்சியாக இருக்க வைட்டமின் C:

முகம் புத்துணர்ச்சியாக இருக்கவும் பளபளப்பாக இருக்கவும் வைட்டமின் C உதவும். வைட்டமின் C நிறைந்த பொருள்களை நம் அன்றாட உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை வைட்டமின் C நிறைந்தது. எலுமிச்சை ரசமாக வைத்து சாப்பிட்டால் வைட்டமின் C நிறைந்த சத்து கிடைக்கும். மோரில் கொஞ்சம் வேப்பிலை கலந்து குடிக்கலாம். அதேபோல் நெல்லிக்காய் சேர்த்து கொள்ளலாம். நெல்லிக்காய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சட்னியாக அரைத்து சாப்பிடலாம். நெல்லிக்கயுடன் தேனும் கலந்து சாப்பிடலாம்

இயற்கை சன்ஸ்கிரின்:

முகபொலிவிற்கு சன்ஸ்கிரின் மிகவும் அவசியம். சில வகை உணவுகள் சன்ஸ்கிரின் போல செயல்படும்.இது உள்ளிருந்து நம் சருமத்தை மிகவும் அழகாக்கும்.

கேரட் இதை நம் போரியலக்கி சாப்பிடலாம். இதை போன்று பூசணிக்காய், சர்க்கரை வள்ளிகிழங்கும் பீட்டா கரோட்டின் கொண்டது என்பதால் இது சருமத்திற்கு இயற்கையான சன்ஸ்கிரின் போன்று செயல்படும்

கேரட் சாறாக்கி மற்றும் ஜூஸ் செய்தும் குடிக்கலாம். கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு,போன்றவை நம் சருமத்தை அழகு படுத்த உதவுகிறது .

சரும சேதத்தை தடுக்கும் லைகோபீன் :

லைகோபீன் என்பது சருமத்தை சூரியனிடமிருந்து சேதமடையாமல் தடுக்க உதவுகிறது. லைகோபீன் நிறைந்த பொருள்களில் மிகவும் முக்கியமானது தக்காளி.தக்காளியை நமுனவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம் . மேலும் தக்காளி சட்னி செய்து சாப்பிடலாம் . தக்காளி சூப், தக்காளி சாலட் என விதவிதமாக சமைத்து சாப்பிட்டு வந்தால் சனம் முகத்தில் ஏற்படும் கோடுகள் நீங்கும். உணவு சமைப்பதில் புலிக்கு பதிலாக தக்காளியை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மென்மையான சருமத்திற்கு ஒமேகா ஃபேட்டி ஆசிட்:

ஒமேகா ஃபேட்டி என்கின்ற அமிலம் நம் உடலின் நல்ல கொளுப்பாகும். இது சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது . அதனால் நம் உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நம் சேர்க்க வேண்டும் . மீன் நம் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் மீனில் மிகவும் முக்கியமானது கானாங்கொளுத்தி மீன் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த மீன் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருப்பதால் சருமத்தை மிகவும் மென்மையாக வைத்திருக்க உதவுகிறது .

சருமத்தை அழகுபடுத்த துத்தநாகம்:

நம் முகத்தில் முக பருக்களை போக்குவதற்க்கு இந்த துத்தநாகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துத்தநாகம் நிறைந்த உணவுகளை நம் எடுத்துக்கொள்ள வேண்டும் . வேர்க்கடலை மற்றும் எள்ளு இரண்டும் மிகவும் முக்கியமானதாகும்

நம் வேர்கடலையை சட்னியாகவும் எள்ளு உருண்டையாகவும் சாப்பிட்டு வந்தால் முக பரு பிரச்சனை நீங்கும். எள்ளு உருடயையாக சாப்பிட முடியவில்லை என்றால் எள் சட்னி மற்றும் குழம்பு போன்றவற்றில் எள்ளை போடி செய்து சேர்க்கலாம் .

ஆன்டி ஆக்சிடன்ட்:

சருமத்திற்கு ஆண்டி ஆக்சிடன்ட் மிகவும் முகியமனதாகும் . இது கதிர் வீச்சு மற்றும் காற்று மாசுபடுதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நம் பலம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் நாவல் பழம், கருப்பு திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம் க்ரின் டீ, துளசி கசாயம் சாப்பிட்டு வந்தால் வயதாகும் தன்மையை குறைக்கின்றன

துளசி அழற்சியை எதிர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தில் தொற்று வராமல் தடுக்க இது மிகவும் உதவுகிறது

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பாலிபினால்கள் :

பாலிபினால்கள் என்பது நீரில் கரையக்கூடிய ஒன்று. இது தாவரத்தின் வேர் முதல் பழம் வரை அனைத்திலும் உள்ளது .பாலிபினால்கள் அதிகம் நிறைந்த கறிவேப்பிலை , சிறு துண்டு வெல்லம், துளசி போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பது போன்று அதை பொடியாக்கவும் சட்னியாகவும் சாப்பிடலாம் . வெல்லத்தை எள்ளுடன் கலந்து பொடியாக்கி சாப்பிடலாம் மேலும் துளசியை தேநீராக்கி குடித்து வரலாம்.

வெல்லம் சருமத்திற்கு அதிகம் பயன்படுத்தலாம் மேலும் கறிவேப்பிலை கூந்தல் வளர்ச்சிக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *