இனி! 7ம் வகுப்பு படித்தால் அனைவருக்கும்! ரூ.1000 கல்வி உதவித் தொகை! உடனே! விண்ணப்பம் செய்ங்க!

தமிழ்நாடு நலவாரியத்தின் மூலம் 7ஆம் வகுப்பு பயிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை விண்ணப்பத்தை எப்படி நிரப்புவது என இப்பதிவில் காணலாம் .

யார் விண்ணபிக்கலாம்?

  • நலவாரிய அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்கள்
  • அந்த தொழிலாளர்களின் 7ஆம் வகுப்பு படிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள்.

தேவையான ஆவணங்கள்:

  • உறுப்பினரின் ஆதார் கார்டு
  • பேங்க் புக்
  • நலவாரிய அட்டை
  • குழந்தையின் ஆதார் கார்டு
  • குழந்தையின் நடப்பு கல்வி சான்றிதழ்

விண்ணப்பம் நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை:

  • தமிழில் மட்டுமே எழுத வேண்டும்;ஆங்கிலத்தில் எழுத கூடாது.
  • அடித்தல்,திருத்தல் பிழை இல்லாமல் எழுத வேண்டும்.
  • நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு நலவாரிய உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகள் ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை விண்ணபிப்பதன் மூலம் ரூபாய் 1000 தமிழக அரசால் வழங்கி வருகிறது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

7 ஆம் வகுப்பு கல்வி உதவி தொகையினை விண்ணப்பிபதற்கான விண்ணப்ப படிவம் கீழே உள்ள 7th Cliam Form என்ற லிங்க் இல் உள்ளது.

விண்ணப்பிக்கப்படும் கல்வி உதவிதொகையின் பெயர் – 7ஆம் வகுப்பு பயில என எழுதவும்.

உறுப்பினராக பதிவு செய்துள்ள வாரியத்தின் பெயர் – உறுப்பினர் அட்டையில் எந்த வாரியத்தின் பெயர் இருக்கோ,அந்த வாரியத்தின் பெயரை எழுத வேண்டும்.

உறுப்பினரின் பெயர் – நலவாரிய அட்டை உறுப்பினரின் பெயரை எழுத வேண்டும்.

தந்தை அல்லது கணவர் பெயர் – அட்டை வைத்திருப்போர் ஆணாக இருந்தால் அவர்களுடைய தந்தை பெயரை குறிப்பிட வேண்டும்.இதுவே பெண்ணாக இருந்தால் அவர்களுடைய கணவர் பெயரை குறிப்பிட வேண்டும்.

முழு முகவரி – உறுப்பினர் அட்டையில் இருக்கும் முகவரியை எழுத வேண்டும்.

பதிவு எண்/நாள் – உறுப்பினர் அட்டையில் உள்ள பதிவு எண் மற்றும் பதிவு செய்ய பட்ட நாளை குறிப்பிட வேண்டும்.

குடும்ப அட்டை எண் – நடப்பில் உள்ள Smart card இல் உள்ள 333 எனத் தொடங்கும் நம்பர் ஐ எழுத வேண்டும்.

ஆதார் எண் – நலவாரிய அட்டையின் உறுப்பினருடைய ஆதார் எண்ணை எழுத வேண்டும்.

தொழிலின் தன்மை – மேலே வாரியத்தின் பெயரில் குறிப்பிட்டுள்ள தொழிலுக்கு சார்ந்த தொழிலை எழுதவேண்டும்.உதாரணத்துக்கு (கட்டுமான தொழில் குறிப்பிட்டால் கொத்தனார்,தச்சு தொழில்…. என குறிப்பிட வேண்டும்.)

கல்வி உதவி தொகை யாருக்காக கேட்கபடுகிறது மகன்/மகள் – பெண் குழந்தைக்காக விண்ணப்பித்தால் மகன் ஐ அடித்து விட்டு பெண் பிள்ளையின் பெயரை எழுதவும்.ஆண் பிள்ளைக்காக விண்ணப்பித்தால் மகள் ஐ அடித்து விட்டு ஆண் பிள்ளையின் பெயரை எடுத்த வேண்டும்.

தேர்ச்சி பெற்ற /பயிலும் வகுப்பு /பயிலும் வருடம் – பயிலும் வகுப்பை டிக் செய்துவிட்டு விண்ணப்பத்தில் 7ஆம் வகுப்பு என குறிப்பிட வேண்டும்.அடுத்து பயிலும் வருடத்திற்கு கீழ் நடப்பு கல்வி ஆண்டை (2025 – 2026)குறிப்பிட வேண்டும்.

பதிவு பெற்ற உறுப்பினரின் கையொப்பம் -.நலவாரிய அட்டையில் கையெழுத்து போடப்பட்டிருந்தால் உறுப்பினர் கையெழுத்து போட வேண்டும் இல்லை அட்டையில் கை ரேகை வைக்க பட்டிருந்தால் கை ரேகை வைக்க வேண்டும்.

இடம் மற்றும் நாள் – விண்ணப்பம் பதிவு செய்யப்படும் இடம் மற்றும் அன்றைய தேதியை குறிப்பிட வேண்டும்.

தொழிற்சங்கத்தினுடைய கையொப்பம் மற்றும் முத்திரை(Seal) – அருகிலுள்ள நலவாரிய மையத்திற்கு சென்று கண்டிப்பாக பெற்று கொள்ளவும்.

7th Claim Form

தொடர்புக்கு :

மேலும் தகவல் பற்றி அறிய அல்லது நல வாரிய சேவை மையம் தொடங்க விருப்பம் இருந்தால் 6380866455 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்களுடைய பெயர்,மாவட்டம்,தாலுகா,ஊர் விவரங்களை அனுப்பவும்.

இன்னும் தெளிவான தகவலுக்கு கீழே உள்ள வீடியோ ஐ பார்க்கவும்👇👇.


 

Share this post: (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *